மானிய விலையில் தென்னை டானிக் விற்பனை

உடன்குடி வட்டார தென்னை விவசாயிகளுக்கு 25 சதவீத மானியத்தில் டானிக் வழங்கப்படும் என தோட்டக்கலை உதவி இயக்குனர் அறிவித்துள்ளார்.

தென்னை மரங்களின் இலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், குரும்பை உதிர்வதை தடுக்கவும், காய்கள் பெரிதாகி பருப்பின் எடை கூடவும், பூச்சி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் தென்னை டானிக் பயன்படுத்தப்படுகிறது.

இதில் தழைசத்து, மண்சத்து, மக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், கந்தகம், இரும்பு, தாமிரம், போரான், மாலிப்டினம் ஆகிய சத்துகளும், ஆக்சிஜன், ஆஸ்கார்பிக் அமிலம் மற்றும் சாலிசிலிக் அமிலம் போன்ற வளர்ச்சி ஊக்கிகளும் உள்ளன.

தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் மரத்திலிருந்து இரண்டு அடிகள் தள்ளி சுமார் நான்கு அங்குல ஆழத்திலுள்ள பென்சில் பரும சிவப்பு நிற வேர் மூலம் 200 மிலி தென்னை டானிக்கை வருடத்திற்கு இருமுறை செலுத்த வேண்டும்.

ஒரு லிட்டர் அடர் திரவத்தில் நான்கு லிட்டர் சுத்தமான தண்ணீரை சேர்த்து ஐந்து லிட்டராக மாற்றி மரம் ஒன்றுக்கு 200 மிலி வீதம் 25 மரங்களுக்கு செலுத்தலாம்.

ஒரு எக்டேருக்கு 35 லி., மட்டும் தேவைப்படுவதால், ஒரு மரத்திற்கு செலவு 10 ரூபாய் மட்டுமே.

லிட்டர் அடர் திரவ டானிக்கின் முழு விலை ரூ.250 சதவீத மானியம் ரூ.62.50 கழித்து ரூ.187.50 வீதம் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.

தென்னை டானிக் தேவைப்படும் விவசாயிகள் உடன்குடி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தின் தோட்டகலை உதவி இயக்குனர் அல்லது உதவி வேளாண்மை அலுவலர்களையோ தொடர்பு கொண்டு பெற்று கொள்ளலாம்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *