நிலகடலையில் அதிக லாபம் பெற

நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இடுவதன் மூலம், தரமான மகசூலை பெறலாம்’ என, எருமப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் தங்கராஜு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

  • நாமக்கல்அடுத்த, எருமப்பட்டி வட்டாரத்தில், தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி விவசாயிகள் பாசிப்பயறு, உளுந்து, நிலக்கடலை, சோளம் ஆகிய பல்வேறு பயிர்களை சாகுபடி செய்யத் துவங்கி உள்ளனர்.
  •  நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இடுவதால், காய் தரமாக கிடைக்கிறது.
  • மேலும், அதில் உள்ள கால்சியம், சல்பர் சத்தினால், ஓடுகள் கெட்டியாவதுடன், எண்ணெய் சதவீதமும் அதிகரிக்கும்.
  • நிலக்கடலைக்கு ஒரு ஹெக்டேருக்கு, 200 கிலோ அடியுரமாகவும், 200 கிலோவை, இரண்டாம் களையின் போது மேலுரமாக இடுதல் வேண்டும்.
  • பயறு வகைப்பயிர்களில், ஹெக்டேருக்கு, 110 கிலோ என்ற அளவில் இடுவதன் மூலம் தரமான மகசூல் பெறலாம்.
  • ஸ்போடோப்டிரா மற்றும் ஹெலிகோவெர்பா புழுக்களைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப்பொறி, ஹெக்டேருக்கு, 12 என்ற அளவில் பொருத்த வேண்டும்.
  • நிலக்கடலை பயிரை தாக்கும் தாய் அந்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த விளக்குப்பொறி, ஹெக்டேருக்கு, ஒன்று என்ற அளவில் பொருத்துவன் மூலம், பூச்சி மருந்து செலவுகளை குறைத்து தரமான மகசூல் மற்றும் அதிக லாபம் பெறலாம்.
  • விளக்குப் பொறிக்கு 500 ரூபாயும், இனக்கவர்ச்சிப் பொறிக்கு, 216 ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது.
  • மேலும், நிலக்கடலை நுண்ணூட்டமும் இருப்பில் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *