ஊட்டச்சத்து கரைசல் தெளித்தால் வேர்கடலையில் 20 சதவீதம் கூடுதல் விளைச்சலை பெறலாம் என வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.இது குறித்து மேல்மலையனூர் வேளாண் உதவி இயக்குனர் பழனிவேலு செய்திக்குறிப்பு:
- வேர்கடலை விதைத்த 25 முதல் 35 நாட்களில், ஊட்டச்சத்து கரைசல் தெளிக்க வேண்டும்.
- இதனால் 20 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும்.
- ஏக்கருக்கு ஒரு கிலோ டி.ஏ.பி.,யுடன், 200 கிராம் போரக்சை 10 லிட்டர் நீரில் ஊற வைத்து மறு நாள் மாலையில் கரைசலை வடிகட்ட வேண்டும்.
- பின்னர் 190 லிட்டர் நீர் கரைசலில், 400 கிராம் அமோனியம் சல்பேட் உரத்தையும், 180 மில்லி பிளானோபிக்ஸ் மருந்தை கலந்தும் கரைசலை தயாரிக்க வேண்டும்.
- மண்ணில் ஈரப்பதம் இருக்கும் போது, மாலை நேரத்தில் கைத்தெளிப்பான் மூலம் தெளித்தால், விழுதுகள் பூமிக்குள் எளிதாக இறங்கி, திரட்சியான வேர்கடலைகள் உருவாகும்.
- இதனை 15 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஒரு முறை தெளிக்க வேண்டும். இவ்வாறு ஊட்டச்சத்து கரைசலை தெளிப்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல் கிடைக்கும்.
- மேலும் விபரங்களுக்கு, விவசாயிகள் அந்தந்த பகுதி வேளாண் அலுவலர்களை அணுகி பயன்பெறலாம்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்