தண்ணீரை சேமிக்கும் குழாய் முனை குறித்து கூறும், Earthfokus ‘ஸ்டார்ட் – அப்’ நிறுவனர், அருண் சுப்ரமணியன் கூறுகிறார்
- நுண் துகளாக்கல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தான், இந்த தயாரிப்பை செய்து உள்ளோம்.
- இந்த முனை, குழாயில் இருந்து வரும் தண்ணீரை, பனி போன்ற துாறலாக வெளியேற்றும். இதனால், தண்ணீர் ஓட்டம், ஒரு நிமிடத்திற்கு, 12 லி., என்பது, 600 மி.லி.,யாக குறைகிறது.
- இந்த குழாய் முனையை, சமையலறை அல்லது குளியலறை குழாயில் பொருத்துவதால், ஒரு நாளைக்கு, 35 லி., தண்ணீரை சேமிக்கலாம்.
- வழக்கமாக ஒரு தடவை கைகழுவும் போது, 600 மில்லி தண்ணீரை பயன்படுத்துகிறோம். இந்த குழாய் முனையை பயன்படுத்துவதால், கைகழுவ, 15 முதல் 20 மில்லி தண்ணீரே செலவாகும்.
- இந்த முனை, 100 சதவீதம் பித்தளையால் தயாரிக்கப்பட்டவை. ஏனெனில், நம் நாட்டில் தண்ணீரின் இயல்பு மாநிலத்திற்கு மாநிலம் மற்றும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாறுபடுகிறது. அதனால் தான், கடினமான நீரில் நீண்ட காலத்திற்கு தாக்குப்பிடிக்க கூடிய வகையில், பித்தளையில் உருவாக்கி உள்ளோம்.
- உதாரணமாக, சலுான் கடையில் முடி திருத்தும் நபர், நுண்துகளாக்கல் செயல்முறையை பயன்படுத்தியே, நம் முடியில் நீர் தெளிக்கிறார். நாங்கள் உருவாக்கிய இந்த குழாய் முனை, ஓர் துளி நீரை, பல துளியாக மாற்றுகிறது. வழக்கமான நீர் ஓட்டத்தில் நாம் கை கழுவும் போது, ஒரே ஓர் அடுக்கு நீரே நம் கையை கழுவுகிறது.
- மற்றவை தேவையில்லாமல் வீணாகிறது. நாம் சிக்கனமாக கை கழுவினால் கூட, நீர் வீணாவதை தடுக்க முடியாது.
- ஆனால், நுண்துகளாக்கல் முறையில், ஒரேயொரு அடுக்கு நீரே உருவாகிறது. குழாயில் இருந்து வரும் ஒவ்வொரு துளி நீரும், நம் கையை நோக்கியே வருகிறது.
- இதனால், நாம் தண்ணீரை சேமிப்பதோடு, பாத்திரங்களை அல்லது கையை நன்றாகவும், குறைந்த நேரத்திலும் கழுவ முடியும்.
- வெற்றிகரமான செயல் விளக்கத்திற்கு பிறகு, தகவல் தொழில் நுட்பத் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, ‘காக்னிசன்ட்’ துவங்கி, சென்னையில் உள்ள பல நிறுவனங்கள், எங்களை தொடர்பு கொண்டு உள்ளன. ஓர் அலுவலக கட்டடத்தில் மட்டும், ஒரு நாளைக்கு, 7,000 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். ‘காக்னிசன்ட்’ நிறுவனத்திற்கு மூன்று கட்டடங்கள் உள்ளன.
- இப்போது, இந்த ஓர் நிறுவனம் மட்டுமே, ஒரு நாளைக்கு, 20 ஆயிரம் முதல், 21 ஆயிரம் லிட்டர் நீரை சேமிக்கிறது. ஓர் ஆண்டுக்கு கணக்கிட்டால், ஒரு கோடி லிட்டர் சேமிக்கப்படுகிறது.
உங்கள் வீட்டில் சமையல் அறையிலும், நீங்கள் வேலை செய்யும் நிறுவங்களிலும் இந்த எளிய முறையை பயன் படுத்தி நீரை சேமிக்கலாம்! விலை ரூ 660
மேலும் விவரங்களுக்கு – https://www.earthfokus.com/
Chennai Engineers Develop Nozzles To Cut Water Wastage By 95%, Save 35 Litres/Day
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்