தாண்டிக்குடி மலைப்பகுதியில் அழிவின் விளிம்பில் உள்ள மலை நெல்லிக்கு மறு வாழ்வு அளிக்க வனத்துறை நடவடிக்கை வேண்டும். நெல்லிக்காயில் விட்டமின்-சி அதிகமாக காணப்படுகிறது. ஒரு பழத்திலிருந்து 650 முதல் 700 மில்லி கிராம் உயிர்சத்து Vitamin C அடங்கியுள்ளது மலும் மலை நெல்லியில் கூடுதலாக பொட்டாஷ் சத்தும் உள்ளது.
தற்போது ஒட்டுரக நெல்லிக்காய் சந்தையில் வந்தப் போதும், இயற்கை சூழலில் ரசாயான கலப்பின்றி வனத்திலிருந்து கிடைக்கும் மலை நெல்லி மருத்துவ குணம் நிறைந்துள்ளது. இனிப்பு சுவை குறைந்து துவர்ப்பு அதிகரித்து காணப்படும். வருடத்தில் 8 மாதங்கள் மகசூலில் பூவுடன் காணப்படும் மலை நெல்லிக்காய் மூலம் தேன் அதிகளவு கிடைக்கிறது.
அதிகளவு மகசூல் காணும் மலை நெல்லி வனப்பகுதியில் அரிதாக எங்கே ஒரு மூலையில் காணும் நிலை உள்ளது. இதற்கு முக்கிய காரணம் காட்டுத் தீயாகும்.
தோட்டக்கலைத்துறை ஆராய்ச்சியில் அழிந்து வரும் மலை நெல்லிக்காயை எண்ணிக்கையை அதிகரிக்க மென் திசு ஒட்டு முறையில் கன்றுகள் தயார் செய்கின்றனர். மருத்துவ குணம் நிறைந்துள்ள மலை நெல்லிக்காய் மரங்களை பாதுகாத்து ஊக்குவிக்க வனத்துறை முயற்சித்தால் இயற்கை கொடுத்த உயிர்சத்து அனைவருக்கும் கிடைக்க ஏதுவாக அமையும்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்