வறட்சியிலும் தாக்குப் பிடித்து அதிக விளைச்சலைக் கொடுக்கும் நெல்லி சாகுபடிக்கான வழிமுறைகளை விவரிக்கும், தஞ்சை மாவட்டம் குருங்குளத் தைச் சேர்ந்த விவசாயி உத்திராபதி கூறுகிறார்:
- நெல்லி கன்று நடவுக்கு முன், மண்ணை சமப்படுத்தி, அதில் தொழு உரங்கள் மற்றும் கால்நடைக் கழிவுகளைக் கொட்டி, மண்ணை வளப்படுத்த வேண்டும்.
- பின், நல்ல மரக்கன்றுகளைத் தேர்வு செய்து, 12 அடி இடைவெளியில் நட வேண்டும். 15 அடி இடைவெளியில் கன்றுகளை நடவு செய்தால், ஊடுபயிர் செய்ய வசதி யாக இருக்கும். இவ்வாறு நடவு செய்தால், ஏக்கருக்கு, 250 முதல், 275 கன்றுகள் வரை நடலாம்.
- ஆண்டிற்கு ஒருமுறை, கால்நடைக் கழிவுகள் மற்றும் மக்கிய இலை தழைகளைக் கொட்டி, இடுபொருளாக இட்டு வருகிறேன். அவ்வப்போது ஏதேனும் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டால் மட்டும், அதற்குத் தகுந்த இயற்கைப் பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்துவேன். இதனால், இடுபொருள் செலவும் இல்லை; விளைச்சலும் அதிகமாக உள்ளது.
- நெல்லியை பொறுத்த வரை, தண்ணீர் அதிகம் எடுக்காத பயிர். மழைக் காலத்தில் மராமத்து செய்து, சரியான முறையில் தண்ணீர் உறிஞ்சும்படி நிலத்தை தயார் செய்வேன். இதனால், ஆறு மாதங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை.
- கோடை காலத்தில் மட்டும், நான்கு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சி னால் போதும். அதிலும், தண்ணீரை மிச்சப்படுத்துவதற்காக, சொட்டு நீர்ப் பாசன முறை செய்திருக்கிறேன். இதனால் தண்ணீர் செலவு மிகவும் குறைவு.
- மிகவும் வறட்சியான நிலத்தில் பயிர் செய்ய, நெல்லி ஏற்ற ரகம்.
- நெல்லி சாகுபடி செய்யும்போது, ஊடுபயிராக சூரியகாந்தி, உளுந்து போன்றவைகளைப் பயிரிடலாம். ஆனால், அவ்வாறு செய்யும்போது, அதில் உள்ள பூச்சிகள், நெல்லி மரத்தைத் தாக்கும் வாய்ப்பு உள்ளது என்பதால், கவனமாக இருக்க வேண்டும்.நான், நெல்லி மரங்களின் ஊடாக, மாமரங்களை நட்டுள்ளேன்.
- நெல்லிக்கன்று வைத்ததில் இருந்து, இரண்டு ஆண்டுகளில் காய்க்கத் துவங்கும். ஏப்ரல் – மே மாதங்களில் ஒருமுறையும், நவம்பர் – டிசம்பர் மாதங்களில் மற்றொரு முறை என, ஆண்டுக்கு இருமுறை நெல்லி காய்க்கும்.
- ஒரு மரத்திற்கு, 50 கிலோ என, ஒரு ஏக்கர் நிலத்தில் ஓராண்டுக்கு, 8 – 10 டன் நெல்லிக் காய் கிடைக்கும்.
- நெல்லிக்கு அதிக மருத்துவ குணங்கள் உள்ளதால், நிலத்திற்கே வந்து வியாபாரி கள் வாங்கிச் செல்கின்றனர். நான் முழுக்க முழுக்க இயற்கை இடுபொருட்களை மட்டுமே இடுவதால், இயற்கை முறையில் விளைந்த நெல்லிக்கு, சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது. இதனால் ஆண்டுக்கு, ஒன்று முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.
தொடர்புக்கு: 09443496706.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Eyargai velanmai patri enakku uptate pannavum.. Enakku 1.5 acr semman kaadu ullathu ithil nan enna vivasayam pannalam athu patri thagaval vendum.
Dear Sir,
for home garden purposes, you can just pluck a piece of the plant with the root and put in a pot
at home. it revives and grows. Pease plan to put in a corner of plot or put in a pot. For me, I did not use any seeds.
Seeds are available from TNAU – pls contact them at
Horticultural College and Research Institute,
TamilNadu Agricultural Univeristy,
Coimbatore – 641 003.
Phone No.: 0422-5511269, 3335030
hope this is useful
regards
-admin
I NEED UPDATES