இலை சுருட்டு புழுவை கட்டுப்படுத்தும் முறை

நடப்பு சம்பா நெற்பயிரில் பரவலாக தென்படும் இலைசுருட்டு புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

  • சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில்  நடப்பு ஏரி பாசன சம்பா சாகுபடி செய்துள்ள பயிர்களில் இலைசுருட்டு புழுவின் தாக்குதல் தற்போதுள்ள தட்பவெப்ப நிலை மாற்றத்தால் பரவலாக தென்படுகிறது.
  • இந்த பூச்சியின் தாக்குதலால் பயிர்களில் உள்ள பச்சையத்தை சுரண்டி தின்று உயிர் வாழ்வதால் பயிர்களின் வளர்ச்சி குன்றி அதிக மகசூல் கிடைக்க கேடு விளைவிக்கும்.
  • எனவே சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தளைச்சத்து கொடுக்கக்கூடிய யூரியா உரத்தை அதிகம் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்.
  • மேலும் தாய் அந்து பூச்சி முட்டையிடுவதை தடுப்பதற்கு இரவு நேரங்களில் விளக்கு பொரி வைத்து அந்த பூச்சியை அழித்து தடுக்கலாம். அல்லது முட்டை ஒட்டுண்ணி ட்ரைக்கோ டிரைம்மா கைலோனிஸ் ஏக்கருக்கு 40 ஆயிரம் என்ற விகிதத்தில் நட்ட 15ம் நாள் முதல் 5 அல்லது 6 முறை இட்டு கட்டுப்படுத்தலாம்.
  • 10 சதவீதத்துக்குமேல் பயிர்களில் தாக்குதல் தென்பட்டால் புரபனோபாஸ் என்ற மருந்தை ஏக்கருக்கு 400 மில்லியை 200 மீட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.அல்லது இண்டோஷாகார்ப் 14.5 எஸ்.சி என்ற வேப்பெண்ணெய் 0.5 சதத்தை ஏக்கருக்கு ஒரு லிட்டரை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.

நன்றி: தினகரன்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *