ஏழை, எளிய விவசாயிகளைக் காப்பாற்றும் ஆடுதுறை 37 நெல்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பல்வேறு குணங்களைக் கொண்ட ஆடுதுறை நெல் ரகங்களைக் கண்டுபிடித்துள்ளது. அதில் அதிக சவுகர்யங்கள் இல்லாத, சிறு விவசாயிகளுக்கு ஏற்றது ஆடுதுறை 37 நெல் ரகமாகும்.

  • பொதுவாக கோடையில் நெல் சாகுபடியை செய்வது மிகக் கடினமானது. இந்தக் கோடையிலும் நல்ல பலனைத் தருவது ஆடுதுறை 37 ரகமாகும்.
  • சிறு விவசாயிகள் இதனை சாகுபடி செய்யலாம்.
  • வைகாசி பட்டத்தில் நெல் சாகுபடி செய்வது சிறிது கடினமானாலும் வைகாசியும் நெல் சாகுபடி பட்டம்தான். இந்த மாதத்தில் கோடை மழை நல்லபடியாக பெய்து கிணறுகளிலும் தண்ணீர் இருப்பின் நெல் சாகுபடியை செய்ய முடியும்.
  • மேலும் வைகாசி பட்டத்தில் சாகுபடிக்கு ஏற்ற நெல்ரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  • கடும் இடர்ப்பாடுகளை கொண்ட இப்பட்டத்தில் குறுகிய கால ஆடுதுறை 43 ரகத்தை சாகுபடி செய்ய இயலாது. ஆனால் இதே பட்டத்தில் ஆடுதுறை 43 ரகத்தைவிட அதிக மகசூலைக் கொடுக்கும் குறுகிய கால ஆடுதுறை 37 ரகம் உள்ளது.
  • இந்த ரகம் கோடையில் பிரச்னைகளை சமாளிக்கும் திறன் கொண்டதால் இதனை சாகுபடி செய்யலாம்.
  • ஆடுதுறை 37 ரகத்தில் நெல் அரவையில் அரிசி அவுட் டேர்ன் 60 சதம் வரை கிடைக் கின்றது. அரிசி குண்டாக இருக்கும். இதர ரகங்களில் 56 சதவீதம் கிடைப்பதே சிரமம் ஆகும்.
  • ஆடுதுறை 37 ரகத்திற்கு கிராமங்களில் மதிப்பு இருப்பதற்கு காரணங்கள் உள்ளன. ஆடுதுறை 37 ரகத்தின் அரிசியை குறுநில விவசாயிகள், கூலி வேலை செய்பவர்கள் அதிகம் விரும்பு கின்றனர்.
  • கரும்பு அறு வடையின்போது வேலைக்கு அமர்த்தப்பட்ட ஆட்கள் நிலச் சொந்தக் காரர்களை கூலியாக பணம் கொடுக்காமல் ஆடுதுறை 37 அரிசியை கூலியாக கொடுக்கும்படி கேட்டுக் கொள்கின்றனர்.
  • ஏழை மக்கள் ஆடுதுறை 37 அரிசியை விரும்புவதற்கு முக்கிய காரணம் இதன் பழைய சோறு கெட்டுவிடாமல் இருப்பதே ஆகும்.
  • ஆடுதுறை 37 ரகத்தில் நெல் மகசூல் கணிசமாக இருப்பதோடு வைக்கோல் மகசூலும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
  • ஆடுதுறை 36 போன்ற ரகத்தில் ஏக்கரில் 200 பிரி வைக்கோல் கிடைக்கும்போது ஆடுதுறை 37 ரகத்தில் 400 பிரி கிடைக்கின்றது.
  • இதர குறுகிய கால ரகங்களைப் போல் ஆடுதுறை 37 ரகம் (வயது 108 நாட்கள்) பூச்சி, வியாதிகளால் தாக்கப்படுவதில்லை.
  • இந்த நெல் ரகத்தின் நெல்மணிகள் உருண்டை வடிவத்தில் நல்ல எடை உள்ளதாகவும் இருப்பதினால் கோடையில் உஷ்ணக் காற்றினால் பாதிக்கப் படுவதில்லை.

விவசாயி ஒருவரது அனுபவம்:

  • கடும் வறட்சி பகுதியில் விவசாயி ஒருவர் வைகாசியில் ஆடுதுறை 37 ரகத்தை சாகுபடி செய்தார். இவர் வைகாசியில் பின் பகுதியில் நாற்றுவிட்டு ஆனியில் நாற்றுக்களை வயலில் நட்டார்.
  • ஆடுதுறை 37 ரகத்தில் விதைத்தூக்கம் உள்ளதால் விவசாயி விதையை சற்று கூடுதலாக உபயோகித்தார்.
  • நாற்றங் காலில் மூன்றாங்கொம்பு நாற்றாக விதைத்தார். நாற்றங்காலுக்கு எருக்கந்தழை 6 சால் கலப்பை உழவும், நான்கு சால் பட்லர் ஓட்டியும் கடைசி உழவின்போது 8 கிலோ டி.ஏ.பி. உரமும் போட்டார்.
  • நடவு வயலில் முன்னால் சாகுபடி செய்யப்பட்டிருந்த உலர்ந்த செடிகள் அதிகம் இருந்தன. நடவு வயலில் 6 சால் கலப்பை உழவு செய்து வேர்க்கடலை செடிகள் பூமியில் அமுக்கப் பட்டது.பிறகு 2 சால் பட்லர் உழவு செய்யப்பட்டது.
  • கடைசி உழவின்போது காம்ப்ளக்ஸ் உரம் 17:17:17 ஏக்கருக்கு 2 மூடைகள் இடப்பட்டன. இதோடு ஏக்கருக்கு அரை மூடை யூரியா இடப்பட்டது.
  • பிறகு 30-34 நாட்கள் வயதுடை நாற்றுக்கள் குத்துக்கு இரண்டு நாற்றுக்கள் வீதம் நடப்பட்டன.
  • நாற்றினை நடுவதற்கு முன் வயலில் பொடி செய்யப்பட்ட 10 கிலோ ஜிங்க் சல்பேட் தூவப்பட்டது.
  • நடவு செய்த 3ம் நாள் ஏக்கருக்கு ஒரு லிட்டர் வீதம் சாட்டர்ன் களைக்கொல்லி இடப்பட்டது. நடவு நட்ட 10ம் நாள் 20 கிலோ யூரியா, 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு, நடவு நட்ட 17ம் நாள் 10 கிலோ யூரியா, 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு, நடவு நட்ட 2ம் நாள் ஒரு களை + 10 கிலோ யூரியா + 15 கிலோ பொட்டாஷ், நடவு நட்ட 40ம் நாள் 20 கிலோ யூரியா + 5 கிலோ பொட்டாஷ் இடப்பட்டன.
  • மேற்கண்ட உரங்களை மண் பரிசோதனை செய்து அதில் கிடைத்த சிபாரிசுப்படி விவசாயி இட்டார்.
  • பயிர் நட்ட 87வது நாள் அறுவடை செய்யப்பட்டது. ஏக்கரில் 80 கிலோ மூடைகள் 30 (மொத்தம் 2,400 கிலோ) மகசூலாகக் கிடைத்தது. ஏக்கரில் ரூ.800 மதிப்புள்ள வைக்கோலும் கிடைத்தது.

பொருளாதாரம்:
மூடை விலை ரூ.600 வீதம் 30 மூடை விலை – ரூ.18,000. வைக்கோல் மதிப்பு ரூ.800. சாகுபடி செலவு ரூ.10,000. நிகர லாபம் ரூ.8,000.
கடும் கோடை, வறட்சி போன்ற சூழ்நிலைகளில் ரூ.8,000 லாபத்தைக் கொடுத்த ஆடுதுறை 37 ரகம் வைகாசி பட்டத்திற்கு சிறந்தது என்பதை காட்டுகின்றது.
-எஸ்.எஸ்.நாகராஜன்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *