கருகும் நெற்பயிரை காப்பாற்ற பிபிஎம் நுண்ணுயிர்

மேலூர் வட்டத்தில் ஒருபோகச் சாகுபடிப் பகுதிகளில் கருகிவரும் நெற்பயிரைக் காப்பாற்ற பிபிஎம் நுண்ணுயிர் கலவையை நெற்பயிரில் தெளிக்கும் செயல்விளக்கம், மேலூர் அருகே விநாயகபுரம் மாநில விதைப் பண்ணையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுரை வேளாண்மைக் கல்லூரிப் பேராசிரியர் எம். சுந்தரம் நுண்ணுயிர் செயல்பாடு குறித்து அளித்த விளக்கம்:

  •   பயிர்களில் பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. அவற்றில் மெத்தைலோ பாக்டீரியம் பயிரின் இலைகள், வேர் பகுதிகளில் அதிகம் வாழ்கின்றன.
  • இவை, பயிரில் மெத்தனால் கரிமத்தை உணவாகக் கொண்டு இலைகளின் வளர்ச்சி ஊக்கியை உற்பத்தி செய்கிறது.
  •   இதனால், நெற்பயிர் காய்ந்துவிடாமல் 15 நாள்கள் வரை பாதுகாக்கப்படுகிறது. மேலும், பயிரின் வளர்ச்சியையும் துரிதப்படுத்துகிறது.
  • கடந்த ஆண்டு காவிரி டெல்டா பகுதியில் சுமார் 1.5 லட்சம் ஏக்கரில் இந்த பிபிஎம் பாக்டீரியம் தெளிக்கப்பட்டது. தண்ணீர் இல்லாத நிலையில், 15 நாள்கள் வரை பயிர்கள் பசுமையாக இருந்தன.
  •   காய்ந்துபோன பயிரில் இதைத் தெளித்ததால், 5 நாளில் மீண்டும் பச்சை நிறத்தை அடைந்தது.
  • பெரியாறு-வைகை பாசனப் பகுதியில் தற்போதைய சூழ்நிலையில் இந்த பாக்டீரியத்தை விவசாயிகள் பயன்படுத்தவேண்டும்.
  •   ஒரு லிட்டர் ரூ. 300 விலையில், மதுரை வேளாண்மைக் கல்லூரி நுண்ணுயிரித் துறையில் விவசாயிகள் வாங்கிக் கொள்ளலாம்.
  • ஒரு ஏக்கருக்கு 200 மில்லி பிபிஎம்.மை 200 லிட்டர் நீரில் கலந்து நெற்பயிர் நனையுமாறு ஸ்பிரேயரால் தெளிக்கவேண்டும்.
  • ஸ்பிரேயரில் ஏதேனும் மருந்து கலந்திருந்தால், நன்கு சுத்தம் செய்த பின்னரே  பயன்படுத்தவேண்டும் என்றார்.

நன்றி: தினமணி 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *