குறுவைப் பயிருக்கு உரமிடும் முறை

குறுவை நெல் பயிருக்கு உரமிடுவது குறித்து வேளாண் இணை இயக்குநர் க. மயில்வாகணன் விளக்கமளித்துள்ளார்.

  • திருவாரூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 38,870 ஹெக்டேரில் குறுவை நெல் பயிரிடப்ப்டடு, தற்போது பயிர் தூர்கட்டும் பருவத்தில் மேலுரம் இடும் தருவாயில் உள்ளது.
  • மேலும், இதுவரையில் 3,353 ஹெக்டேரில் நாற்றங்கால் அமைக்கப்பட்டு விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர்.
  • குறுவைப் பருவத்துக்கு மேலுரம் இடும் போது முதல் மேலுரம் நடவு செய்த 15-ம் நாள் 28 கிலோ யூரியா இட வேண்டும்.
  • 2-வது மேலுரம் பஞ்சு கட்டும் தருணத்தில் 28 கிலோ யூரியாவுடன் 17 கிலோ பொட்டாஷ் சேர்த்து இடலாம்.
  • மூன்றாவதாக நடவு செய்த 45-ம் நாள் 28 கிலோ யூரியா இட பரிந்துரை செய்யப்படுகிறது.
  • பொட்டாஷ் உரம் மேலுரமாக இட முடியாத சூழ்நிலையில் கீழ்காணும் முறையில் பொட்டாஷ் சத்தை பயிருக்கு அளிக்கலாம்.
  • மண்ணில் உள்ள பொட்டாஷ் உரத்தை கரைத்து பயிருக்கு அளிக்கும் பாக்டீரியாவை ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் 25 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து இடலாம்.
  • இந்த பாக்டீரியாவை யூரியா போன்ற ரசாயன உரங்களுடன் கலந்து இடக் கூடாது.
  • மல்டி கே என்ற உரத்தை ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்,

மேற்காணும் முறைகளைப் பின்பற்றி பயிருக்கு சாம்பல் சத்தை அளிக்கலாம் என மயில்வாகணன் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *