சம்பா நெல் சாகுபடியில் பூச்சி, நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த பயிற்சி

புதுக் கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடியில் பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்த சிறப்பு பயிற்சி முகாம் ஆலங்குடி அடுத்த வம்பனில் இயங்கி வரும் வேளாண் அறிவியல்  மையத்தில் 2014 செப்டம்பர் 23ம் தேதி நடைபெற உள்ளதாக அதன் தலைவர் ஞானமலர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில், கந்தர்வகோட்டை மற்றும் ஆலங்குடி வட்டாரங்களில் பரவலாக சம்பா பருவத்தில் நெல் பயிரிடப்படுகிறது.
நெல்லில் மகசூல் குறைவதற்கு பல்வேறு வகையான காரணங்கள் உள்ளன. குறிப்பாக பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் காரணமாக சுமார் 30 சதவீத மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

இப்பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதலின் அறிகுறிகள், இவற்றின் வாழ்க்கைச் சுழற்சி, காலநிலை மாற்றத்தால் இவற்றில் ஏற்படும் மாறுதல்களைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

இந்த சம்பா பருவத்தில் நெல்லைத் தாக்கக்கூடிய முக்கியமான பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த சிறப்பு பயிற்சி முகாம் வம்பன் வேளாண் அறிவியல் மையத்தில் 2014 செப்டம்பர் 23ம் தேதி நடைபெறுகிறது. எனவே, இதில் விவசாயிகள் தவறாமல் கலந்துகொண்டு பயன் பெற வேண்டும். மேலும், விவரங்களை 04322290321 என்ற தொலைபேசி எண்ணில்  தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என்றார்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *