தமிழ் நாட்டின் நெல் களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் இப்போது சிகப்பி என்ற நெல் ரகம் பயிரிட படுகிறது.
அண்ணாமலை பல்கலைகழத்தில் உண்டாக்கப்பட்ட இந்த ரகம் 150-154 நாட்கள் கொண்டது சம்பா பட்டத்திற்கு சிறந்தது
இதை பற்றி கூறும் அண்ணாமலை பல்கலை கழக பேராசிரியர் Dr கதிரேசன் ” இந்த ரகம் மழை, புயல் பாதிப்பு இருக்காது. வட கிழக்கு பருவத்தில் வரும் புயல் இருந்தால், நீர் அதிகம் நின்றாலும் பயிர்கள் அழுகாது.
ஒரு ஹெக்டேருக்கு 3.4 டன் வரை மகசூல் கிடைக்கிறது. வெள்ளை நிறமும் சிறிய அளவும் இருக்கும் இந்த தானியங்கள் இட்லி தோசை செய்ய சிறந்தது. மார்க்கெட்டில் அதிக விலை போகிறது

புயல் வந்தால் முழுதாக மூழ்கினாலும் 10 நாட்கள் வரை தாங்கும் திறன், ஹெக்டருக்கு 6 டன் வைக்கோல் கொடுக்கும் போன்றவை இந்த ரகத்தின் சிறப்பு அம்சங்கள்.
சுனாமி பாதிக்க பட்ட கிராமங்களில் இந்த ரகம் நல்ல பயன் தந்து உள்ளது. வேதாரன்யத்தின் தலைஞாயிறு வட்டகுடி போன்ற இடங்களில் நேரடி விதைப்பு மூலம் பயிரிட படுகிறது
மேலும் விவரங்களுக்கு
Dr கதிரேசன் அண்ணாமலை பல்கலை கழகம் போன்: 04144-239816, அலைபேசி: 09655188233
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்