நெற்பயிரில் இயற்கை முறை பூச்சி கட்டுப்பாடு

நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வரப்புகளில் பயறு வகைகளை பயிரிட வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.இது குறித்து வேளாண் அதிகாரி கூறியதாவது:

  • நெற்பயிரில் இலைச் சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், புகையான், பச்சை தத்துப்பூச்சி, ஆனைக்கொம்பன் ஈ ஆகியவை தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
  • இந்த பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பொறிவண்டு, சிலந்தி, தட்டான், நீள்கொம்பு வெட்டுக்கிளிகள் போன்ற நன்மை செய்யும் பூச்சிகள் உதவுகின்றன. இவைகள் தீமை செய்யும் பூச்சிகளை உண்கின்றன.
  • மேலும், நெல் பயிரிட்டுள்ள வயல்களில் உள்ள வரப்புகளில் தட்டைப்பயறு, உளுந்து ஆகியவற்றை பயிரிடலாம். இந்த பயறு வகை செடிகள் பொறிவண்டுகளை கவர்ந்திழுக்கின்றன. அவைகள் தீமை செய்யும் பூச்சிகளை உண்பதால், நெற்பயிரில் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தப்படும். இதன் மூலம் பூச்சிக்கொல்லி உபயோகத்தை குறைக்கலாம்.
  • தட்டைப்பயறு அல்லது உளுந்து விதைகளை வரப்பில் 15 செ.மீ இடைவெளிக்கு ஒன்றாக ஊன்ற வேண்டும். இதற்கு தனியாக நீர் பாய்ச்ச தேவையில்லை. நெற்பயிறுக்கு பாய்ச்சும் நீரே போதுமானது.
  • இந்த பயிர்கள் மூலம் விவசாயிகளுக்கு விளைச்சல் கிடைத்து லாபம் அடையலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: தினகரன் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *