நெற்பயிரில் குருத்துபூச்சி தாக்குதல் கட்டுபடுத்துவது எப்படி

சேரன்மகாதேவி வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரை தாக்கியுள்ள குருத்துபூச்சியை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் உதவி இயககுநர் ஜெயசெல்வின் இன்பராஜ் விளக்கமளித்துள்ளார்.

  • குருத்துபூச்சி இளம்புழுக்கள் கடுக்குருத்தை தாக்கி சேதப்படுத்துவதால் நடுக்குருத்து காய்ந்து விடுகிறது.
  • பயிரில் கதிர்தோன்றும் நிலையில் கருத்து பூச்சி தாக்குதலால் வெண்கதிர் தோன்றுகிறது. இதனால் மகசூல் பாதிக்கப்படுகிறது.
  • இப்பூச்சிதாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் ஒரு லிட்டர் தண்ணீரில் மானோகுரோட்டோபாஸ் 2.5 மிலி., அல்லது புரபனேபாஸ் 2 மிலி., அல்லது குளோர்பைரிடாஸ் 2.5 மில்லியுடன் ஒட்டு திரவத்தை கலந்து தெளித்து குருத்துபூச்சியை கட்டுப்படுத்தலாம்.
  • மேலும் ஒரு ஏக்கருக்கு 2சிசி டிரைக்கோகிரம்மா கைலானிஸ் ஒட்டுண்ணியை பயன்படுத்தியும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
  • இது குறித்து மேலும் விவரம் அறிய விரும்பும் விவசாயிகள் வேளாண் விரிவாக்க மைய அலுவலர்களிடம் ஆலோசனை பெற்று பயன் பெறலாம்.

இத்தகவலை சேரன்மகாதேவி வேளாண் உதவி இயக்குநர் ஜெயசெல்வின் இன்பராஜ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *