நெற்பயிரில் துத்தநாகக் குறைபாடு

நெற்பயிரில் ஆங்காங்கே பயிர் திட்டுதிட்டாக வளர்ச்சி குன்றியுள்ளதா, முதிர்ந்த இலைகள் முதலில் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமடைந்து பின்னர் துருப்பிடித்ததுபோன்ற மங்கலான புள்ளிகளுடன் காய்ந்துவிடுகின்றதா என்று கவனியுங்கள்.

மேற்கண்ட அறிகுறிகள் உங்கள் நெற்பயிரில் காணப்பட்டால், துத்தநாகக் குறைபாடு தோன்றியுள்ளது என்று தெரிந்துகொள்ளலாம்.

  • அதிக அளவு மணிச்சத்து மற்றும் தழைச்சத்து உரங்களை இடுதல். மக்கிய எரு போன்ற அங்கக உரங்களை அதாவது இயற்கை உரங்களை குறைவாக இடுதல் ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது.
  • மேலும் இரவு வெப்பநிலை 20 டிகிரி சென்டிகிரேடுக்கு குறையும் போது, களர், உவர்மண் தன்மை கொண்ட வயல்களில் துத்தநாகப் பற்றாக்குறை, குறிப்பாக சம்பா (பிசானம்)பருவத்தில் அதிகளவில் தோன்றுகிறது.
  • தீவிர பாதிப்பு ஏற்பட்டால், கதிர் விடுவது தாமதப்படுதல் அல்லது கதிர் வராமல் இருக்கும் நிலை ஏற்படும்.
  • கதிர் வந்தாலும் மணிகள் சிறுத்து, குறைந்த எண்ணிக்கையில் நிற்கும்.
  • இவ்வாறான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்ததும் துத்தநாக சல்பேட் 0.5 சதக் கரைசல் பத்து நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
  • கைத்தெளிப்பான் கொண்டு நெற்பயிரில் 0.5 சத துத்தநாக சல்பேட் கரைசல் தெளிக்க ஏக்கருக்கு 200 லிட்டர் நீருக்கு ஒரு கிலோ கிராம் துத்தநாக சல்பேட் தேவை.
  • துத்தநாக சல்பேட் கரைசல் இலைகளில் நன்கு படிய
    சாண்டோவிட், இன்ட்ரான், ஸ்டிக்கால் போன்ற திரவ சோப்புகளில் ஒன்றினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கலக்கிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் எஸ்.ஜெயராஜன் நெல்சன் கேட்டுக் கொள்கிறார்.
நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *