நெற்பயிர்களை தாக்கும் பூச்சிகள் தடுக்க யோசனைகள்

  • நெல் பயிரில் கார் பருவத்தில் தாக்கிய குருத்துப் பூச்சிகள் பிசான பருவத்திலும் தாக்க வாய்ப்புள்ளது. ஆரம்பகட்ட நடவடிக்கையின் மூலம் இதன் பாதிப்பை குறைக்கலாம்.
  • அறுவடையின் போது அடித்தூரை அதிக உயரம் விடாமல் தரையோடு அறுவடை செய்ய வேண்டும்.
  • அறுவடை முடிந்தவுடன் உழவு செய்ய வேண்டும்.இதன் மூலம் குருத்துப்பூச்சி, துங்ரோ வைரஸ் நோயை பரப்பும் பச்சை தத்துப்பூச்சி ஆகியவற்றின் கூட்டுப் புழுக்கள் அழிக்கப்படுகின்றன.
  • ஆனைக்கொம்பன் ஈ, இலை சுருட்டுப்புழு, கதிர்நாவாய்ப்பூச்சியின் வாழ்விடங்களான வரப்புகளை சுற்றியுள்ள களைகள், புல் பூண்டுகளை முற்றிலும் அழித்து விட வேண்டும்.
  • எட்டு அடிக்கு ஒரு அடி பட்டம் விட்டு வரிசை நடவு அல்லது 25 செ.மீ.,க்கு 25 செ.மீ., இடைவெளி விட்டு செம்மை நெல் சாகுபடி செய்வதன் மூலம் புகையான், இலை சுருட்டுப்புழுக்களின் இன பெருக்கத்தை குறைக்கலாம்.
  • தழைச்சத்தை பல தடவைகளாக பரிந்துரைப்படி பிரித்து இட வேண்டும்.
  • அடியுரமாக இடப்படும் தழைச்சத்துடன் வேப்பம் பிண்ணாக்கை கலந்து இட வேண்டும். இதன் மூலம் பூச்சி நோய்களை கட்டுப்படுத்துவதோடு, தழைச்சத்து ஒரே சீராக கிடைத்திட செய்யலாம்.
  • 2 முதல் 3 நாட்கள் நீரை வடித்து வைப்பதன் மூலம் கூண்டுப் புழுவை இறக்க செய்திடலாம்.
  • அடிக்கடி நீரை வடித்து பாய்ச்சுவதன் மூலம் புகையான் தாக்குதலை தவிர்க்கலாம்.
  • விளக்கு பொறி, இன கவர்ச்சி பொறி வைப்பதன் மூலம் பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம்

இவ்வாறு  அம்பாசமுத்திரம் வேளாண்மை உதவி இயக்குனர் மகாலிங்கம் கூறியுள்ளார்

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *