நெற் பயிரில் லட்சுமி நோய் தாக்குதலை கட்டுப்படுத்திட முறை

நெற் பயிரில் லட்சுமி நோயை கட்டுப்படுத்த கையாள வேண்டிய வழிமுறைகளை வேளாண் அறிவியல் நிலையம் அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நெற்பயிரில் லட்சுமி நோய் தாக்குதல் காணப்படுகிறது.

அறிகுறிகள்:

 • இதன் அறிகுறிகள் நெற் கதிரில்தான் புலப்படக்கூடியவை.
 • இந்நோய்க்கு நெல்புழுநோய் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
 • நோயுற்ற நெல்மணிகள் உருவில் பெரிதாக இருக்கும்.
 • கதிரில் உள்ள நெல்மணிகள் ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் பழுத்து துகள்களாக மாறிவிடும்.
 • பாதிக்கப்பட்ட நெல்மணிகளை கையால் தொடும்போது மாவுபோல் பூசணத்தின் வித்துக்கள் காணப்படும்.
 • இந்நோய் கதிரை தாக்கி அதிக மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.
 • சாதாரண நிலையில் இருந்த இந்நோய் தற்போது ஆங்காங்கே காணப்படுகிறது.
 • காற்றில் அதிக ஈரப்பதம் 90 முதல் 95 சதம் இருக்கும்போதும் குறைந்த வெப்பநிலை மற்றும் தொடர் மழையால் இதன் நோய்க்காரணி அதிகமாவதற்கும், பரவுவதற்கும் உகந்ததாகும்.
 • இந்நோய்க்கு காரணமாக அமைந்திருப்பது ஒரு வகைப் பூசணமாகும்.

தடுக்கும் முறைகள்:

 • நோயற்ற விதைகளை பயன் படுத்த வேண்டும்.
 • நோயற்ற வயலில் உள்ள அறுவடை, கழிவுகளை அகற்றிவிட வேண்டும்.
 • குத்துக்கட்டும் பருவம் அல்லது பூக்கும் பருவத்திற்கு முன் ஹெக்சகோனசல் லிட்டருக்கு 1 மி.லி., குளோரோதலான் மருந்துடன் லிட்டருக்கு 2 கிராம், காப்பர் ஹைட்ராக்சைடு லிட்டருக்கு 2.5 கிராம் ஆகிய பூசணக் கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்.
 • பாதிக்கப்பட்ட நெற்கதிர்களை தனியாக அறுவடை செய்து எரித்துவிட வேண்டும்.
 • பாதிக்கப்பட்ட வயலில் இருந்து அறுவடை செய்யும் நெல்மணிகளை விதைக்கு பயன்படுத்தும்போது கேப்டான் அல்லது கார்பன்டாக்சிம் என்ற பூசனக்கொல்லி மருந்தை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
 • இதனைச் செய்ய மறந்தால் அடுத்த பருவத்தில் நோய் தொற்றுவதற்கு உகந்த காரணிகள் இருக்கும் பட்சத்தில் லட்சுமி நோய் மீண்டும் மீண்டும் தாக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்நோய்தாக்குதலை தடுக்க விவசாயிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் டாக்டர் சாத்தையா கூறியுள்ளார்

நன்றி: தினமலர்

நெற்பயிரை பற்றிய மற்ற செய்திகளை இங்கே படிக்கலாம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *