நெல்லில் இலையுறை அழுகல் நோய்

கம்பம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிரில் இலையுறை அழுகல் நோய் தாக்குதல் காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்துவது குறித்து கம்பம் வேளாண் உதவி இயக்குனர் அசோகன் கூறியிருப்பதாவது :

  • கம்பம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிரில் பரவலாக இலையுறை நோய் தாக்குதல் காணப்படுகிறது.
  • கதிர் வெளிவரும் தருணத்தில் கதிரை சுற்றி கண்ணாடி இலையில் மேல் கருஞ்சிவப்பு புள்ளிகள் தோன்றும். இதனால் இலையுறையை விட்டு கதிர்கள் வெளிவராது.
  • நிறம் மாறி கதிர்கள் பதராக விடும். கண்ணாடி இலையுறை அழுகி காணப்படும். காற்று மற்றும் பூஞ்சாணம் மூலம் இந்நோய் பரவும்.
  • கட்டுப்படுத்த சூடோமோனாஸ், புளோரோசன்ஸ் நுண்ணுயிரிடுதல் மூலம் கதிர் அழுகல் தீவிரத்தை 20 முதல் 40 சதவீதம் குறைக்கிறது.பயிர் வளர்ச்சியை தூண்டி மகசூலை அதிகரிக்கிறது.
  • தாக்குதல் ஆரம்பநிலையில் இருக்கும் போது ஒரு டாங்க் தண்ணீரில் 5 மில்லி சூடோமோனாஸ், புளோராசன்ஸ் கலந்து இலைவழி தெளிப்பு மேற்கொள்வது நல்லது.5 சதம் வேப்பங்கொட்டை சாறு அல்லது 3 சதம் வேப்ப எண்ணெய் கரைசல் அல்லது 10 சதவீதம் வேலிகருவேல் இலைச் சாறு இவைகளில் ஏதேனும் ஒன்றை நோய் தோன்றும் தருணத்திலும் மீண்டும் 10 நாட்கள் இடைவெளியிலும் தெளிக்கலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் இலையுறை நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம், என்றார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *