நுண்ணுயிர் உரங்கள் பயிர்களுக்கு தொடர்ந்து சத்துக்களை உற்பத்தி செய்து கொடுப்பவை. நுண்ணுயிர் உரமான அசோஸ்பைரில்லம் தழைச்சத்தை நிலைப்படுத்தும். இதன் மூலம் ஏக்கருக்கு 25 கிலோ தழைச்சத்து கிடைக்கிறது.
மண்ணில் உள்ள கரையாத மணிச்சத்தை பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் கரைத்து பயிர்களுக்கு தருகிறது. பயிர்களின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு மண்வளம், சுற்றுப்புற சூழ்நிலையும் பாதுகாக்கப்படுகிறது.
25 கிலோ மட்கிய தொழு உரம் அல்லது 25 கிலோ மணலுடன் தலா 2 கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா கலந்து நடவிற்கு முன்பாக சீராக துாவ வேண்டும். நெல் விதைத்த 3 – 5 நாட்களுக்குள் எக்டேருக்கு 250 கிலோ அசோலாவை பரவலாக துாவி வளரவிட வேண்டும். அசோலா வளர்ச்சியடைந்த நிலையில் நெல்லுக்கு களையெடுக்கும் போது ரோட்டரி களை கருவி அல்லது காலால் மிதித்து மண்ணில் அமிழ்த்த வேண்டும்.
இந்த அசோலா 10 நாட்களுக்குள் மட்கி நெற்பயிருக்கு தழைச்சத்து கிடைக்க உதவுகிறது. இதன் மூலம் எக்டேருக்கு 30 – 40 கிலோ தழைச்சத்து கிடைக்கும். மதுரை ஒத்தகடை வேளாண்மை கல்லுாரி நுண்ணுயிரியல் துறையில் நுண்ணுயிர் உரங்கள் விற்பனைக்கு உள்ளன. தேவைப்படும் விவசாயிகள் பெறலாம்.
-கிருஷ்ணகுமார்
உதவி பேராசிரியர்
ஹேமலதா
ஒருங்கிணைப்பாளர் வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை
அலைபேசி: 9865287851
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்