நெல் அறுவடைக்கு பின்பு சிறுதானியம் சாகுபடி

தற்போது பெய்துள்ள மழையால் கண்மாய்கள் ஓரளவு பெருகியுள்ள நிலையில் அறுவடைக்கு பின்பு உளுந்து உள்ளிட்ட சிறுதானியங்கள் பயிரிட்டால், ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காரைக்குடி  சாக்கோட்டை ஒன்றியத்தில் மொத்தமுள்ள 326 கண்மாயில் 10 சதவீத கண்மாய்கள் முழுமையாகவும், மீதி கண்மாய்கள் ஓரளவு தண்ணீருடனும் காணப்படுகிறது.  ஆண்டு சராசரி இந்த மாத முடிவுக்குள் எட்டி விடும். தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையால், அவ்வப்போது தொடர், தூறல் மழை பெய்து வருகிறது.

எனவே இந்த மழை நீரை விவசாயிகள் தேக்கி வைத்து, சிக்கனமாக பயன்படுத்த வேளாண் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

சாக்கோட்டை வேளாண் உதவி இயக்குனர் மணிவண்ணன் கூறும்போது:

  • நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், அறுவடைக்கு பின்பு நீர் நிலையில் உள்ள தண்ணீரை கொண்டு நிலங்களில் பயறு வகைகளான உளுந்து, பாசிப்பயறு, தட்டை பயறு, துவரை, சிறுதானியங்களாக சோளம், கம்பு, ராகி, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, நிலக்கடலை சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம்.
  • நெல் பயிரினை காட்டிலும் உளுந்து, சிறுதானியங்களில் சாகுபடி செலவு குறைவு.
  • உளுந்து 60 நாள் பயிர். ஒரு ஏக்கரில் 300 முதல் 400 கிலோ வரை உளுந்து சாகுபடி செய்யலாம். இதன் மூலம் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை லாபமாக கிடைக்கும். க
  • திர் அறுப்புக்கு முன்பு விதைக்கலாம். ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதை தேவைப்படும்.
  • பூக்கும் நேரத்தில் மட்டும் டி.ஏ.பி., கரைசலை தெளிக்க வேண்டும்.
  • சாக்கோட்டை வேளாண் விரிவாக்க மையத்தில் உளுந்து வம்பன் 5 விதைகள் உள்ளன, என்றார்.
  • விபரங்களுக்கு: 09442473786 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *