நெல் குருத்துப்பூச்சியை கட்டுப்படுத்த யோசனை

நெல் குருத்துப்பூச்சியை கட்டுப்படுத்த கடையம் வேளாண் அதிகாரி யோசனை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு கார்பருவத்தில் நெல் குருத்துப்பூச்சியினால் பெருத்த சேதம் ஏற்பட்டு நஷ்டம் ஏற்பட்டது.

  • நெல் குருத்துப்பூச்சியை பூச்சி மருந்துகள் தெளித்து முழுமையாக கட்டுப்படுத்த முடியாது.ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மேற்கொண்டால் குருத்துப்பூச்சியை ஒழிக்க முடியும்.
  • நெல் நடவு செய்தவுடன் ஒரு ஏக்கரில் 5 எண்ணம் நெல் குருத்துப்பூச்சிக்கான இனக்கவர்ச்சி பொறிகளை வைக்க வேண்டும்.
  • இப்பொறியிலுள்ள பெண் அந்துப்பூச்சியின் வாசனைக்கு ஆண் அந்துப்பூச்சிகள் கவர்ந்திழுக்கப்பட்டு அழிக்கப்படும்.
  • இதனால் குருத்துப்பூச்சியின் இனப்பெருக்கம் முற்றிலும் தடைபட்டு குருத்துப்பூச்சி தாக்குதலை தவிர்க்கலாம்.

மேலும் விபரங்களுக்கு கடையம் வட்டார வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுக வேண்டுமென கடையம் வேளாண்மை உதவி இயக்குநர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *