நெல் கொள்முதல் – வங்கி கணக்கில் தொகை நேரடி வரவு

“அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், விற்பனை செய்யப்படும் நெல்லுக்கான தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்’ என, தஞ்சை நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் முகமது பாதுஷா தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:

  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக, அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்குரிய தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கில் உடனுக்குடன் வரவு வைக்கப்படுகிறது.
  • நெல்லுக்குரிய தொகை, நேரடி கொள்முதல் நிலையங்களில் பணமாக பட்டுவாடா செய்வது முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது.
  • விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு, நெல் விற்பனைக்கு கொண்டு வரும் போது, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகலுடன் வர வேண்டும்.
  • வங்கி கணக்கு துவங்காத விவசாயிகள், வங்கி கணக்கை உடனடியாக துவக்கி இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
  • இந்த நடைமுறை தொடர்பாக, மேலும் விவரம் அறிய தஞ்சை விவசாயிகள், 04362235823, கும்பகோணம் விவசாயிகள், 04352415207, பட்டுக்கோட்டை விவசாயிகள், 04373235080 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி:தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *