நெல் சாகுபடியில் சணப்பு பசுந்தாள் உரம்

நெல் பயிரில் சீரான குறைவில்லாத அதிக மகசூல் பெற தழை உரமிடுதல் அவசியம்.

இதனால் மண்ணில் (எருவில்) அங்ககத்தன்மை அதிகரிப்பதால் மண்ணின் வளம் பேணப்படுவதுடன் மண்ணின் அமைப்பும் மேன்மை அடைகிறது, மற்றும் இராசயன உரத்தின் செயல் திறனும் அதிகரிக்கிறது. இதனால் அடுத்து சாகுபடி செய்யும்  குறுவை நெல் பயிரில் மகசூல் அதிகரிக்கிறது.

எனவே கோடைமழையினை பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு சணப்பு விதை 20 கிலோ வீதம் விதைக்க வேண்டும்.

சரியாக விதைத்த 35-வது நாளில் 50 சதவீத பூக்கள் பூத்துள்ள நிலையில் வயலில் 1 அங்குல அளவிற்கு தண்ணீரை நிறுத்தி மடக்கி உழவு செய்ய வேண்டும்.

நன்மைகள்

  • ஒரு ஏக்கருக்கு 10 முதல் 14டன் எடையுள்ள பசுந்தாள் உரம் கிட்டுகிறது. களைகள் வளர்வது தவிர்க்கப்படுகிறது.
  • பசுந்தாள் உரம் மக்குவதால் உற்பத்தியாகும் அங்கக அமிலம் நடவு பயிரில் இடக்கூடிய மணிசத்து உரங்களின் செயல் திறனை அதிகரிக்கச் செய்கிறது.
  • மண்ணின் களர் உவர் நிலை குறைபாடுகள் நீங்க காரணமாகிறது.
  • வயலில் உள்ள நன்மை பயக்கும் மண்புழு முதலான உயிர்கள், மற்றும் நன்மை தரும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிப்பதால் தீமை பயக்கும் நோய் கிருமிகளின் எண்ணிக்கை குறைகிறது. சாண எரு அடிப்பதை காட்டிலும் செலவு மிகக்குறைவு.

தகவல்: வேளாண்மை துணை இயக்குநர், உழவர் பயிற்சி நிலையம், குடுமியான்மலை.

நன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “நெல் சாகுபடியில் சணப்பு பசுந்தாள் உரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *