நெல் விளைச்சலை அதிகரிக்க “லேசர் லெவலர்’ என்ற, புதிய எந்திரத்தினை பயன்படுத்தி தேனி விவசாயிகள், நிலத்தை சமப்படுத்தி வருகின்றனர்.விவசாயத்துறையில் தற்போது, திருந்திய நெல் சாகுபடி, வரிசை நடவு போன்ற புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் ஒரு எக்டேருக்கு சாகுபடி 10.50 டன்னாக உள்ளது.மேலும், விளைச்சலை அதிகரிக்க, தற்போது “லேசர் லெவலர்’ என்ற எந்திரம் பயன்படுத்தப்படுகிறது.
- நிலத்தை, புழுதி உழவு செய்து மேல் மண் முழுக்க பவுடராக்கிய பின்னர்,”லேசர் லெவலர்’ எந்திரம் மூலம் சமப்படுத்த வேண்டும்.
- இதன் மூலம் நெல் வயல் முழுக்க ஒரே அளவாக தண்ணீர் நிற்கும்.
- பழைய முறையில்,சில இடங்களில் தண்ணீர் தேங்காது, சில இடங்களில் தேங்கும். தண்ணீர் நிற்காத பகுதியில், விளைச்சல் குறைவாக இருக்கும்.
- தண்ணீர் அதிகம் தேங்கியிருக்கும் இடத்தில் அழுகல் நோய் ஏற்பட்டு சாகுபடி பாதிக்கப்படும்.
- ஆனால் “லேசர் லெவலர்’ தொழில் நுட்பத்தில், சீரான மட்டத்தில் வயல் முழுக்க தண்ணீர் நிற்பதால், விளைச்சல் 10 சதவீதம் அதிகமாக இருக்கும்.
- தண்ணீர் 30 சதவீதம் சேமிக்கப்படும்.
- இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், இந்த நுட்பம் அறிமுகம் செய்யப்பட்ட போது, சில விவசாயிகள் மட்டும் பயன்படுத்தினர். தற்போது பெரும்பாலான விவசாயிகள் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். மேலும் இது குறித்து, விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம், என விவசாய பொறியியல் துறையினர் தெரிவித்தனர்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்