பாரம்பரியமிக்க நெல் ரகங்கள் தூயமல்லி, மிளகி, கருங்குருவை

பசுமை புரட்சி என்ற பெயரில், குறுகிய கால ரகங்களை பயிரிட்டு, பூச்சி கொல்லிகளையும், ரசாயன உரங்களையும் தெளித்து, மண்ணை மலடாக்கியது மட்டுமல்லாமல், எண்ணற்ற பறவை இனங்கள் அழிவுக்கும் நாம் காரணமாகி விட்டோம். பாரம்பரிய நெல் ரகம் அழிந்து வருகிறது. அந்த ரகங்களை விவசாயிகள் பயிரிட்டு, பயனடைய வேண்டும், என துாயமல்லி, மிளகி, கருங்குருவை உள்ளிட்ட ரகங்களை விதைக்காக பயிரிட்டு, தேவைப்படும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளார், காரைக்குடி அருகே புதுவயலைச் சேர்ந்த விவசாயி கருநாவல்குடி.

Courtesy: Dinamalar

அழிந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்களை மீண்டும் உழவுக்கு கொண்டு வந்து பரவலாக்கும் முயற்சியில் ஈடு பட்டுள்ளார். அவர் கூறும்போது:

  • அரை ஏக்கரில் பாரம்பரிய ரகங்களை விதைக்காக பயிரிட்டுள்ளேன். புதுக்கோட்டை ரோஸ் தொண்டு நிறுவனம், தஞ்சாவூர் ஜெயராமன் ஆகியோரிடம் இவற்றை வாங்கினேன். ரசாயன உரங்கள் கிடையாது.
  • பஞ்சகவ்யா, மீன் அமினோ, மண்புழு, மக்கிய இலைகள் தான் உரம். ஒன்றரை மீட்டர் உயரம் வரை இதன் நாற்று வளரும்.
  • நெல்லைப் போல், இதன் வைக்கோலும் சுவையாக இருக்கும். மாடுகள் விரும்பி உண்ணும்.
  • பாரம்பரிய நெல் ரகங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல அனைத்து விவசாயிகளும் உறுதி எடுக்க வேண்டும். ஒட்டு ரக நெல்களை வாங்கி விதைக்கும்போது, பூச்சி மருந்து, உரம் என மாற்றி மாற்றி தெளித்து, உரக் கடைக்கு பணத்தை வாரி இறைக்க வேண்டியுள்ளது.
  • பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் விவசாயம் செய்யும் போது, இதற்கு அவசியம் கிடையாது.
  • இயற்கை முறையில் உள்ள பயிர்களுக்கு விலை அதிகம் என, இடைத்தரகர்கள் தவறான
    பிரசாரத்தை மக்களிடம் கொண்டு செல்கின்றனர். ஆனால், அப்படி எதுவும் கிடையாது. அதிகமாக பயிரிடும்போது, விலை குறைவாக வழங்கலாம். நிழல்வலை மூலம் கத்தரி, வெண்டை, தக்காளி ஆகியவற்றையும் பயிரிட்டு வருகிறேன், என்றார்.

செந்தில்குமார், காரைக்குடி

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “பாரம்பரியமிக்க நெல் ரகங்கள் தூயமல்லி, மிளகி, கருங்குருவை

    • Nandhakumar says:

      ஐயா கருங்குறுவை 120 நாளில் விளையும் …குறுவை அல்லது கார் பட்டம் சிறப்பு
      நந்தகுமார் .ம
      9003232187

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *