மண்ணை வளமாக்க சம்பா அறுவடை வயல்களில் உளுந்து, துவரை

சம்பா அறு வடை செய்த வயலில் குறுகிய கால பயிர்களான உளுந்து, துவரை சாகுபடி செய்து அதிக லாபம் பெற லாம் என வேளாண் உதவி இயக்குனர் சேகர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் விவசாயிகளுக்கு தெரிவித்துள்ள ஆலோசனை வருமாறு:

கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் பகுதிகள் அதிகளவு விவசாயம் நிறைந்த பகுதிகளாகும். கடந்த சில ஆண்டுகளாக விவசாயத்திற்கு போதி யளவு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்த ஆண்டு மேட்டூரிலிருந்து பாசன வாய்க்கால்களில் தண்ணீர் தொடர்ந்து வந்ததால் விவசாயம் நல்ல முறையில் நடந்து வருகிறது.

இந்த ஆண்டு சம்பா சாகுபடி எதிர்பார்த்தது போல நல்ல விளைச்சல் தந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சம்பா அறுவடை செய்த நிலங்களில் மண்ணை மேலும் வளமாக்க குறுகிய கால பயிர்கள் சாகுபடி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எனவே சம்பா அறு வடை ஆன நிலங்களை நன்றாக உழுது குறுகியகால பயிர்களான உளுந்து, துவரை சாகுபடி செய்ய லாம்.

ஒரு ஏக்கருக்கு 8 கிலோ வீதம் விதைகளை வாங்கி தெளிக்காலம். இந்த சீசனில் உளுந்து, துவரை சாகுபடி செய்தால் தற்போதுள்ள சீதோஷ்ண நிலைக்கு நல்ல மகசூல் ஈட்டலாம். உளுந்து, துவரை ஆகியவை 70 முதல் 75 நாட்கள் பயிர்களாகும். அறுவடை செய்த நிலங்களில் இது போன்ற குறுகிய கால பயிர்களான உளுந்து, துவரை ஆகியவை சாகுபடி செய் தால் விவசாய நிலங்களில் உள்ள மண்ணும் வளமாகும். மேலும் நல்ல மகசூல் ஈட்டி லாபம் பெறலாம். இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் சேகர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *