வறட்சியைத் தாங்கும் குதிரைவாலி

கோவை வேளாண் பல்கலை அறிவியல் மையம் கண்டுபிடித்துள்ள, குறுந்தானிய குதிரைவாலி கோ (கேவி2) ரகம், மதுரை மாவட்டத்திற்கு, ஏற்றதென, நிரூபிக்கப்பட்டுள்ளது.

மதுரை விவசாயக் கல்லுாரியின் வேளாண் அறிவியல் மையம் சார்பில், 2011 முதல், மூன்றாண்டுகளாக விவசாயிகளின் நிலத்தில், பயிரிடப்பட்டு, அதிகபட்ச விளைச்சல் இலக்கை எட்டியுள்ளது. இதுகுறித்து, மைய உதவி பேராசிரியர் செல்வி கூறியதாவது:

  • திருமங்கலம், சேடபட்டி, கள்ளிப்பட்டி, கள்ளிக்குடி, உசிலம்பட்டி ஒன்றியங்கள் மழையை நம்பி பயிர் செய்யப்படுகின்றன.
  • இங்கு மானாவாரியில் விவசாயிகள் குறுந்தானியங்களை பயிரிட்டாலும், எக்டேருக்கு ஒன்றே கால் டன் அளவில் தான் விளைச்சல் பெறுகின்றனர்.
  • உற்பத்தி செலவுடன் ஒப்பிடும் போது, லாபம் குறைவு தான்.எங்களது ரகத்தை எக்டேருக்கு பத்து கிலோ விதைகளை சாகுபடி செய்தால், 95 நாட்களில் இரண்டரை டன் விளைச்சல் கிடைக்கும்.
  • வறட்சியைத் தாங்கும், மழைபெய்தாலும் பயிர் சாய்ந்து விடாமல் நிற்கும்.
  • 2011 முதல் 2012ல் கள்ளிக்குடியில்  சிவரக்கோட்டை, 2013ல் சேடபட்டியில் கே.ஆண்டிபட்டி, 2014ல் உசிலம்பட்டியில் ரங்கசாமிபட்டி கிராமங்களில் தலா பத்து விவசாயிகளைத் தேர்ந்தெடுத்தோம். ஒரு ஏக்கர் பரப்பளவில், அரை ஏக்கர் விவசாயிகள் விரும்பும் ரகத்தை பயிரிடுவது, அரை ஏக்கரில் எங்களது ரகத்தை பயிரிடுவதென பிரித்து செயல்படுத்தினோம்.
  • அரை ஏக்கருக்குரிய அதிக விளைச்சல் கிடைத்ததால், ஒவ்வொரு ஒன்றியத்திலும் 300 விவசாயிகள் வரை, இந்த ரகத்தை பயிரிடுகின்றனர்.
  • தானியமாக விற்பதைக் காட்டிலும், விதையாக விற்பனை செய்தால், நல்ல லாபம் கிடைக்கும்.
  • விதை நீக்கிய தக்கையை, கால்நடை தீவனமாக தரலாம்.
  • எங்களிடமும் குறைந்த அளவில், விதைகள் விற்பனைக்கு உள்ளன. புரட்டாசி பட்டமும், அடுத்து வரக்கூடிய ஆடி பட்டமும் ஏற்றது. கிணற்று பாசனம் மூலம் விளைச்சல் பெறலாம், என்றார். விதைகள் தேவைக்கு:09443185237

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *