அழிவிலிருந்து காக்கப்படுமா பனை மரங்கள்?

பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்ததும் பல்வகைப் பயன்பாடு உடையதுமான பனை மரங்கள் அழிந்து வருவது கவலையளிப்பதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன் 15 கோடிக்கும் அதிகமான பனை மரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. வறட்சியைக் கண்காணிக்கும் அற்புதக் கருவியாக பனை மரங்கள் இருந்து வந்தன. ஏரிக்கரை கள் , விளை நிலங்களின் வரப்புகள் என எங்கெங்கும் வரிசை கட்டி பனை மரங்களை நம் முன்னோர் வளர்த்து வந்தனர்.

Panai

மண் அரிப்பைத் தடுத்து கரையை பலப்படுத்தும் இயற்கை அரணாக பனை மரங்கள் விளங்கி வந்தன. கடும் வறட்சியிலும் நீரைத் தேக்கி வைக்கும் வல்லமை வாய்ந்தது பனை மரம்.
உடல் உறுப்பு தானம் என்ற கருத்தியலை முதன் முதலாக அறிமுகப்படுத்தியதே பனை மரங்கள் தான் என்றே கூறலாம். அந்த அளவிற்கு பனையின் அத்தனை பாகங்களும் மனிதனுக்கு பயன்தரக் கூடியதாக இருந்து வந்துள்ளது.

பனை மரங்களின் வார் வீடு கட்டப்பயன்படும் அதன் ஓலை பண்டைய வீடுகளின் கூரைகளாகி பயனளித்தன. பனை நார் பொருட்களை கட்டுவதற்கு பன்பட்டது. பனம்பழங்களை சுட்டு பஞ்ச காலங்களில் பசியாறிய வரலாறும் உண்டு. இதன் நுங்கு அற்புத மருத்துவ குணம் வாய்ந்த உணவுப் பொருளாக இன்றளவும் விளங்கி வருகிறது.

பனங்கிழங்கு நார்ச்சத்து மிகுந்த சுவையான தின்பண்டம். பனங்கொட்டையின் சோறு எனப்படும் பகுதி புரோட்டீன் மிகுந்த உணவாகும். பனங்கரு்பபட்டி மிகச்சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த்தாகவும், தற்போது புழக்கத்தில் இருந்து வரும் சர்க்கரைக்கு மாற்றான இனிப்பாகவும் உள்ளது. பதநீர் உடலுக்கு குளிர்ச்சியை தரவல்லது. அது மட்டுமல்லாமல் பனை மரங்கள் சிட்டுக்குருவிகள் போன்ற உயிரினங்களின் புகலிடமாகவும் விளங்கி வந்தன.

இதன் வேர் 30 அடி ஆழம் வரை நிலத்தில் ஊடுருவி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பனை மரம் தான் தமிழகத்தின் அரசு மரம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.

பல பெருமைகள் வாய்ந்த பனை மரங்கள் தற்போது அழிந்து வருகின்றன. பனை மரங்கள் அழிவது அந்தப் பகுதியின் எதிர்கால வறட்சிக்கு அறி குறி என்று கூறப்படுவதால் அவற்றை காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

இதிகாச சிறப்பு மிக்கது

தொல்காப்பியம், ராமாயணம், திருக்குறள், போன்றவை எழுதப்பட்டது. பனை ஓலையில் தான் என்பது தனிச்சிறப்பு பனை ஓலைகள் இல்லையெனில் இது போன்ற காவிங்களும் இன்னபிற இலக்கியங்களும் நமக்கு காணக் கிடைத்திருக்காது.

கிட்டத்தட்ட 50 முதல் 60 பனை மரங்களிலிருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி 1 ஏக்கர் கரும்பி லிருந்து பெறப்படும் சர்க்கரைக்கு இணையானது. கரும்பிற்குத் தேவைப்படும் அளவு பனை மரத்திற்கு நீர் தேவைப்படாது என்பதே இதன் சிறப்புகளில் ஒன்று

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *