வரப்பு ஓரங்களில், பனை மரங்களை நட்டால், பல விதங்களில் வருவாய் ஈட்டலாம்.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், பெரும்பாலான விவசாயிகள், ஏரி மற்றும் கிணற்று பாசனத்தை நம்பி தான் நெல் பயிரிடுகின்றனர்.
கோடை காலங்களில், நெல், காய்கறி பயிர்களை சாகுபடி செய்வது குறைவு தான். இதுபோன்ற காலங்களில், வருவாய் இன்றி நிலம் தரிசாக இருக்கும்.அவ்வாறு இருப்பதை தவிர்க்க, வரப்பு ஓரங்களில் பனைமரம் நட்டு வைத்தால், கோடை காலங்களிலும் வருவாய் கிடைக்கும்.
இது குறித்து, வயல் ஓரத்தில் பனை மரம் நட்டுள்ள, விவசாயி, டி.கணேசன் கூறியதாவது:
- வயல் வரப்பு ஓரங்களில் பனை மரம் நட்டால், துவக்கத்தில், ஓலையில் வருவாய் கிடைக்கும்.
- ஐந்து ஆண்டுகளுக்கு பின், நுங்கு, பனங்கிழங்கு ஆகிய விளைப்பொருட்களில் இருந்து கூடுதல் வருவாய் கிடைக்கும்.
- கோடை காலங்களில், தரிசாக இருக்கும் நிலத்திலும், பனை மரங்கள் மூலமாக வருவாய் ஈட்டலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: 8883558711
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்