சிவகாசி எம்.புதுப்பட்டி நெடுங்குளம் கிராம விவசாயி சுப்பிரமணியன் புதிய முயற்சியாக ஒட்டு ரக பப்பாளி பயிரிட்டு அறுவடை செய்கிறார். 72 வயதாகும் இவர் தற்போது மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பி.எப்.டேக்(பண்ணை படிப்பு)முதல் ஆண்டு படிக்கிறார்.அவர் கூறியதாவது:
- ரெட்ராயல் (Red royale) என்னும் ஒட்டு ரக பப்பாளியை 1 ஏக்கரில் சாகுபடி செய்து உள்ளேன். ஒட்டு ரக செடி ஸ்ரீவில்லிப்புத்தூர் பூவாணியில் கிடைக்கிறது.
- கரிசல் காட்டு மண் என்பதால் செடி நன்கு வளர்கிறது. வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்.
- உரத்தின் அளவும் குறைவு தான்.
- இந்த ரக பப்பாளி ஒன்று 1 முதல் 2 கிலோ வரை இருக்கும். செடி நட்டு 6 மாதம் பின் ஒவ்வொரு நாளும் குறைந்தது 300 கிலோ வரை பப்பாளி கிடைக்கிறது. மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ. 12 முதல் 20 வரை விலை போகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு குறைந்தது 300 முதல் 500 வரை வருமானம் கிடைக்கிறது. செடியின் வாழ்வு காலம் 2 ஆண்டு. இரண்டு ஆண்டில் 200 டன் பப்பாளி மகசூல் பெறுவேன். குறைந்தது 10 லட்சம் வரை லாபம் ஈட்டலாம்,என்றார்.
- தொடர்புக்கு 09443460082.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்