இலவச காளான் வளர்ப்பு பயிற்சி

புதுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் கிராமிய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் 6 நாட்கள் நடத்தப்படும் காளான் வளர்ப்பு இலவச பயிற்சிக்கு வரும் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை இந்தி யன் ஓவர்சீஸ் கிராமிய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் காளான் வளர்ப்பு பயிற்சி 6 நாட்கள் இலவசமாக அளிக்கப்பட உள்ளது. இதில் புதுக் கோட்டை கிராமப்புறத்தைச் சேர்ந்த படித்த வேலை இல்லாத இளைஞர்கள் கலந்து கொள் ளலாம். பயிற்சியில் தினசரி  இலவச மதிய உணவு மற்றும் படிப்பதற்கான குறிப்பு புத்தகங்களுடன் தரமான பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
இதில் 18 வயது முதல் 35 வயதிற்குள் உள்ள கிராமப்புற ஆண்கள் மற்றும் பெண்கள் 3 பாஸ் போர்ட் சைஸ் புகைப்பட நகல்க ளோடு மாற்றுச்சான்றிதழ், வாக்காளர் அடை யாள அட்டை, குடும்ப அட்டை நகல்களையும் இணைத்து அவரவர் தம்முடைய செல்போன் எண்ணையும் குறிப்பிட்டு வரும் 2014 நவம்பர்  17ம் தேதிக்கு முன்பாக நேரில் வந்து விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு நிலைய இயக் குநர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், 15062, மேல நான்காம் வீதி, திலகர் திடல் ஆட்டோ ஸ்டாண்ட் எதிரில், புதுக் கோட்டை.  (தொலை பேசி எண் 04322225339, செல் போன் எண் 09994737185) என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “இலவச காளான் வளர்ப்பு பயிற்சி

  1. SUBRAMANIAN says:

    அருமையான வாய்ப்பு உடனுக்குடன் அறிய முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *