இலவச வேளாண் பயிற்சி

நாகை, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், கோவையில் 2 நாள் நடைபெறவுள்ள வேளாண்மை குறித்த இலவச பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் விஞ்ஞானி பரசுராமன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் இணைந்து 2014 மார் 29,30 ஆகிய இருநாள்களில் வேண்மை சார்ந்த இலவச பயிற்சியை இளைஞர்களுக்கு அளிக்கவுள்ளது.

இதில் பருவத்துக்கேற்ற பயிர் ரகங்கள், நவீன தொழில்நுட்பம், மானியம் மற்றும் திட்டங்கள் குறித்த விளக்கங்கள் அளிக்கப்படும்.

நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இதில் பங்கேற்க தங்களது பெயரை முன்பதிவு செய்ய வேண்டும்.

குறுந்தகவலாக பதிவு செய்ய 09962840682, 09840974748 ஆகிய செல் பேசிகளுக்கு அனுப்பலாம்.

விவரங்கள் அறிய நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன, நாகை மாவட்ட கிராம வளமையத்தை அனுகலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *