கிருஷ்ணகிரி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக பயிற்சி, ஆராய்ச்சி நிலையம் சார்பில், வியாழக்கிழமை (2015 ஜூலை 16) கறவை மாடுகள் பராமரிப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து அந்த ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட செய்திகுறிப்பு:
கிருஷ்ணகிரி கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பயிற்சி, ஆராய்ச்சி நிலையத்தில் கறவை மாடுகளைத் தாக்கும் நோய்கள் குறித்த இலவச பயிற்சி முகாம் வரும் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது. இதில் கறவை மாடுகள் வளர்ப்பு என்ற தலைப்பில் தீவன முறைகள், மாடுகளைத் தாக்கும் நோய்கள், அவற்றைத் தடுக்கும் முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
விருப்பம் உள்ள விவசாயிகள், தலைவர், கால்நடைப் பல்கலைக் கழக பயிற்சி, ஆராய்ச்சி நிலையம், எண் 3-500, ராயப்ப முதலியார் தெரு, திருவள்ளுவர் நகர், கிருஷ்ணகிரி. என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04343235105 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். முதலில் வரும் 25 பேர் மட்டுமே பயிற்சியில் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்