வணிக முறையிலான காய்கறி மற்றும் பழப்பொருள்கள் தயாரித்தல் குறித்த இரு நாள் பயிற்சி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2014 மே 28 ஆம் தேதி தொடங்குகிறது.
இதில் உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள், பலவகை பழ ஜாம், பழரசம், தயார்நிலை பானம், ஊறுகாய், ஊறுகனி, தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
இப்பயிற்சியில் சேர ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,000 செலுத்தி தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
நேரில் வந்து பெயரை பதிவு செய்துகொள்ள இயலாதவர்கள் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை 641003 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இப்பயிற்சியில் சேர பதிவு செய்துகொள்ள இறுதி நாள் 2014 மே 27 ஆம் தேதியாகும். மேலும் விவரங்களுக்கு 04226611340, 04226611268.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்