நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் ஆக. 3ஆம் தேதி காளான் வளர்ப்பு குறித்த ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
இந்தப் பயிற்சியில் காளான் வளர்ப்பு செய்வதற்கேற்ற ரகங்கள், தேவையான மூலப் பொருள்கள் மற்றும் உற்பத்தி தொழில் நுட்பங்கள் குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
எனவே, காளான் உற்பத்தி செய்ய ஆர்வமுள்ள அனைவரும் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயன் பெற லாம் என்று வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் தி. செங்குட்டுவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
பயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரை நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 04367260666 மற்றும் 04367-261444.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்