கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்

பெங்களூருவில் 2015 பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் கோழி வளர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.இதுகுறித்து மாநில கோழி இனப்பெருக்கம், பயிற்சி மையம் வெளியிட்ட செய்தி:

மாநில கோழி இனப்பெருக்கம், பயிற்சி மையத்தின் சார்பில், பெங்களூரு, ஹெசரகட்டாவில் உள்ள அலுவலகத்தில் கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் பிப்ரவரி 23 முதல் 28-ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு நடைபெறவிருக்கிறது.

இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்க விரும்புவோர் துணை இயக்குநர், தேசிய ஒருங்கிணைந்த கோழி இனப்பெருக்கத் திட்டம், மாநில கோழிப்பண்ணை, ஹெசரகட்டா, பெங்களூரு-560089 என்ற முகவரி அல்லது 08028466093 என்ற தொலைபேசியில் அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *