‘வரும், 2016 மார்ச் 29ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் நடக்கிறது’ என, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் அகிலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2016 மார்ச் 29ம் தேதி , காலை, 9 மணிக்கு, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ என்ற தலைப்பில், ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடக்கிறது. முகாமில், நாட்டுக்கோழி ரகங்கள், வளர்ப்பு முறைகள், தீவன அளவுகள், குஞ்சு பொரிக்கும் விதம், குஞ்சு பொரிப்பான்களின் பயன்கள் குறித்து விளக்கப்படுகிறது.
மேலும், நாட்டுக்கோழிகளைத் தாக்கும் நோய்கள், அதன் அறிகுறிகள், அவற்றைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள், நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரில் வந்தோ அல்லது, 04286266345 , 04286266650 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு, வரும், 28ம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
முதலில் முன்பதிவு செய்யும், 30 பேருக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படும்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Useful information
நான் நாட்டு கோழி வளர்க்க ஆசைப்படுகிறேன் அதற்கு எப்படி வளர்ப்பு என்று கூறுங்கள் எனது போன் நம்பர் 90873 100 30 என்னை அழைக்கவும்