நாட்டுக் கோழி வளர்ப்பு இலவசப் பயிற்சி

கிருஷ்ணகிரியில் வருகிற 2013 செப்டம்பர் 30-ஆம் தேதி நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத் தலைவர் அன்னல்வில்லி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதி 2-இல் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்படுகிறது.

இங்கு வருகிற  2013 செப்டம்பர்30-ஆம் தேதி காலை 9 மணிக்கு நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்து இலவசப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

பங்கேற்க விருப்பமுள்ளவர்கல் ஆராய்ச்சி நிலைய தொலைபேசி எண் 04343225105-இல் தொடர்பு கொண்டோ அல்லது நேரிலோ முன் பதிவு செய்து கொள்ளலாம்.

முதலில் பதிவு செய்யும் 25 பேர் மட்டுமே இந்தப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர் என்றார் அவர்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *