ரோஜா சாகுபடிக்கான நவீன தொழில்நுட்ப பயிற்சி முகாம்

புதுக்கோட்டை: வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் ரோஜா சாகுபடிக்கான நவீன தொழில்நுட்பங்கள் குறித்த விவாசாயிகளுக்கான பயிற்சி முகாம் 24ம் தேதி நடக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்தமங்கலம், கீரமங்கலம், கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ரோஜா மலர் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

ரோஜா மலர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை வம்பன் வேளாண் அறிவியல் நிலையம் துவக்கியுள்ளது.

இதற்காக நவீன தொழில் நுட்பத்தின் மூலம் ரோஜா செடிகளை சாகுபடி செய்து குறைந்த செலவில் தரமான ரோஜா மலர்களை உற்பத்தி செய்சவதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு வரும் 2012 ஜனவரி 24ம் தேதி பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாவட்டத்தில் ரோஜா சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

முனைவர் மற்றும் தலைவர்,
வேளாண் அறிவியல் நிலையம், வம்பன் காலனி,
புதுக்கோட்டை – 622 303

தொலைபேசி – 04322290321

 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *