பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், 2013 அக். 28-ம் தேதி அசோலா உற்பத்தி மற்றும் தீவன மேலாண்மை பயிற்சி நடைபெற உள்ளது.
இதுகுறித்து, மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி. வெங்கடேசன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
- ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில், அசோலா உற்பத்தி மற்றும் தீவன மேலாண்மை குறித்த ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் 2013 அக். 28-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.
- இப்பயிற்சியில், அசோலாவை உற்பத்தி செய்யும் முறை, தீவன பயன்பாடு, விஞ்ஞான முறையில் சமச்சீர் தீவனம் தயாரிக்கும் முறை உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
- இதில், பங்கேற்க விரும்பும் விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் வேளாண் அறிவியல் மையத்தை 04328293251, 04328293592, 04328292365 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றார் அவர்.
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்