வேளாண் இயந்திரமயமாக்கல் குறித்து பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரமயமாக்கல் குறித்து ஒருவார பயிற்சி வழங்கப்பட உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் மற்றும் கரும்பு பயிர்களுக்கு சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசன கருவிகள் மூலமான நீர் மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் வேளாண் கருவிகளை கையாள்வது குறித்து ஒரு வாரம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் 40 வயதுகுட்பட்ட விவசாயிகள் பங்கேற்கலாம். பயிற்சியின் போது உதவித்தொகை வழங்கப்படும்.

புதுக்கோட்டை டவுன் அம்பாள்புரம் 1ம் வீதியில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் அறந்தாங்கி டவுன் ரங்கோஜிபாவா தெருவில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் இப் பயிற்சி வரும் 2011 நவம்பர் 14ம்  தேதி முதல் தொடர்ந்து ஒருவாரம் வழங்கப்படும்.
பயிற்சியில் பங்கேற்க விரும்பும் புதுக்கோட்டை, விராலிமலை, அன்னவாசல், குன்றாண்டார்கோவில், திருவரங்குளம், கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி பஞ்சாயத்து யூனியன் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் புதுக்கோட்டை வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் பெயர்களை முன்பதிவு செய்யலாம்.

அறந்தாங்கி, அரிமளம், பொன்னமராவதி, திருமயம், ஆவுடையார்கோவில், மணமேல்குடி பஞ்சாயத்து யூனியன் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அறந்தாங்கி வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் பெயர்களை முன்பதிவு செய்யலாம்.

மேலும் தகவல்பெற விரும்புவோர் 04322221816   மற்றும் 04322221816  என்ற ஃபோன் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *