வாழை மட்டையிலிருந்து நார் பிரித்தெடுக்கும் இலவச பயிற்சி

நாமக்கல்லில், வாழை மட்டையிலிருந்து நார் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பங்கள் குறித்த இலவச பயிற்சி முகாம் வரும் 2011 ஜூன் 14-ம் தேதி நடைபெறுகிறது.

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வாழை மட்டையிலிருந்து நார் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெறவுள்ளது.

இதில் வாழை நாரின் முக்கியத்துவம், வாழை நார் பிரித்தெடுப்பதற்கு மட்டை தேர்வு செய்யும் முறை, இயந்திரம் மூலம் வாழை நார் பிரித்தெடுத்தல், வாழை நாரை பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்.

விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்துக்கு நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தொடர்புக்கு 04286266345, 04286266244, மற்றும் 04286266650.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *