பருத்தியில் வேர் அழுகல் நோய் இளம் மற்றும் வளர்ந்த செடிகளில் தோன்றுவதால் வளர்ச்சி குறைந்து காணப்படும். நோய் தாக்குதலான செடிகள் காய்ந்து விடுவதால் பல இடங்களில் நிலம் வெற்றிடமாகி விடும். இலைகள் மஞ்சள் நிறமாகி, பழுத்து உதிர்ந்துவிடும். நோய் தாக்குதலுக்கு உள்ளான செடியும் சீக்கிரமாக காய்ந்து விடும்.
நோய் தீவிரமடையும் போது, செடிகளில் ஆணி வேரைத் தவிர மற்ற வேர்கள் அழுகி விடுகின்றன. ஆணி வேரின் மேல் பட்டை அழுகிச் சிதைந்து நார்நாராக உரிந்து காணப்படும். நோயினால் பாதிக்கப்பட்ட செடியை மெதுவாக இழுத்தாலே எளிதில் கையோடு வந்துவிடும். தண்டுக்கூன் வண்டின் தாக்குதல் இந்நோயின் பாதிப்பை அதிகரிக்கும்.
வேர் அழுகல் நோயின் அறிகுறிகள் தென்பட்டால், ஒரு லிட்டர் நீருக்கு 1 கிராம் கார்பன்டசிம் கலந்த மருந்து கலவையை நோய் தாக்கிய செடிக்கும் அதை சுற்றியுள்ள செடிகளுக்கும், வேர்பகுதி நனையும்படி மருந்து கலவையை ஊற்ற வேண்டும். வயலில் நீர் தேங்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
– பேராசிரியர் ம.குணசேகரன்,பயிர் மருத்துவ நிலையம்,பருத்தி ஆராய்ச்சி மையம், ஸ்ரீவில்லிபுத்தூர்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்