மானாவாரி பருத்தி சாகுபடி

  • வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், மதுரை மாவட்டத்தில் மானாவாரி பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யலாம், என விவசாயத்துறை அறிவுறுத்தியுள்ளது.
  • மானவாரி பருத்தி ரகங்களான கேசி 2, கேசி 3, எஸ்.வி.பி.ஆர் 2, எஸ்.வி.பி.ஆர்., 4 ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
  • மானாவரியில் பருத்தி தனி பயிராகவோ அல்லது கலப்பு பயிராகவோ (பயிறு, சூரியகாந்தி, மக்காசோளம்) சாகுபடி செய்யலாம்.
  • தனிப்பயிராக சாகுபடி செய்யப்படும் போது எஸ்.வி.பி.ஆர்., ரகங்களை 60 * 30 செ.மீ., இடைவெளியிலும் கேசி 2, கேசி 3 ரகங்களுக்கு 45 X 15 செ.மீ., இடைவெளியிலும் ஊடுபயிராக சாகுபடி செய்யப்படும் போது பருத்தி இணைவரிசையில் 30 செ.மீ., இடைவெளியிலும் வரிசைக்கு வரிசையில் 60 செ.மீ., இடைவெளியில் விதைக்க வேண்டும்.
  • பஞ்சு நீக்கப்படாத விதையாக இருந்தால் ஹெக்டருக்கு 20 கிலோ தேவை.
  • அமில விதை நேர்த்தி செய்து பஞ்சு நீக்கிய விதையை புங்கம் இலைக்கரசலில் 8 மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்த வேண்டும்.இதனால் வறட்சியிலும் முளைப்புத்திறன் அதிகரிப்பதோடு நல்ல வளர்ச்சி கிடைக்கும்.
  • அதிக விளைச்சலை பெற ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை பின்பற்றி பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தலாம், என விநாயகபுரம் நீர் மேலாண்மை பயிற்சி நிலைய வேளாண்மைதுணை இயக்குனர் இந்திராகாந்தி, உதவி இயக்குனர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *