- பருத்தி பயிரை தாக்கி மகசூல் இழப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்களில் முக்கியமானது “வெர்டிசில்லியம்’ என்னும் வாடல் நோய்.
- இது பாதித்தால், செடிகளில் இலைகளின் நரம்புகள் பச்சையாகவும், மற்ற பகுதிகள் மஞ்சளாகவும் மாறும்.
- மஞ்சள் நிறப்பகுதி வாடி கருகிவிடும்.
- எனவே இலை புலிவரிக்கோடுகள் போல தோன்றும். பின் இலைகள் காய்ந்து உதிரும். படிப்படியாக செடிகள் காயும்.
- பருத்தி விதைக்கு முன் ஆழமாக கோடை உழவு செய்து நோய்க்காரணிகளை சூரியனின் வெப்பத்திற்கு உட்படுத்தி அழிக்க வேண்டும்.
- விதைக்கும் முன் எக்டேருக்கு 150 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.
- தொழு உரம் எக்டேருக்கு 12.5 டன் இடவேண்டும்.
- விதையை நேர்த்தி செய்கையில், விரிடி என்ற உயிர் பூஞ்சானக்கொல்லி 4 கிராம் அல்லது கார்பன்டைசிம் 2 கிராம் அல்லது திரம் 4 கிராம், ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
நோய் தாக்கியபின்:
- நோய் தாக்கியபின் என்றால் பூஞ்சானக் கொல்லி ஒரு கிராம் பவுடர் ஒருலிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து நோய் தாக்கப்பட்ட செடிகளின் வேரைச்சுற்றி நன்கு நனையும்படி ஊற்ற வேண்டும்.
- நோய் தாக்கிய செடியின் அருகில் உள்ள மற்ற செடிகளுக்கும் ஊற்ற வேண்டும்.
- மேற்கண்ட முறைகளை கையாண்டு இந்த வாடல் நோயில் இருந்து பருத்திச் செடியை காக்கலாம். மகசூலையும் பெருக்கலாம்.
கி.ராஜேந்திரன்,
வேளாண்மை துணை இயக்குனர், மதுரை.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்