பாம்பு, மீன் வேட்டையாடுமா? தண்ணீருக்கு வெளியே தலையை நீட்டிப் பார்க்குமா? வாய்ப்பு குறைவுதான். ஆனால், பாம்பைப் போன்ற நீண்ட தலையையும், மீன் வேட்டையாடும் பண்பையும் கொண்டுள்ளது ஒரு பறவை. அதன் பெயர் பாம்புத்தாரா.
ஆங்கிலப் பெயர்: Oriental Darter or Snake Bird
பெயர்க் காரணம்: நீளமான கழுத்தைக் கொண்டது. தண்ணீருக்குள் இருந்து அவ்வப்போது வெளியே எட்டி பார்க்கும் தலை, வளைந்த பாம்பைப் போல நீண்டிருக்கும். அதன் காரணமாகவே இந்தப் பெயர் வந்தது.
அடையாளங்கள்: இதன் உடல் வாத்தைவிடச் சற்றே பெரிது. கறுப்பு நிறம், முதுகில் பளபளப்பான சாம்பல் நிறப் பட்டைகளைக் கொண்டிருக்கும். அலகு ஈட்டியைப் போலக் கூர்மையானது. மற்ற பறவைகளுடன் சேர்ந்து ஒரே மரத்தில் கூடு அமைக்கும்.
தனித்தன்மை: ஈரமாக இருக்கும் இறக்கைகளைக் காய வைப்பதற்காக நீர் காகத்தைப் போலவே பாம்புத்தாராவும் மரக் கிளைகளில் இறக்கைகளை விரித்து வைத்துக் காய வைக்கும்.
உணவு: ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் நீருக்குள் மூழ்கி மீன்களைப் பிடித்து உண்ணும்.
தென்படும் இடங்கள்: வேடந்தாங்கல், கூந்தங்குளம், வெள்ளோடு (ஈரோடு மாவட்டம்), வேட்டங்குடி (சிவகங்கை மாவட்டம்)
கேரளத்திலும் பெங்களூரில் உள்ள ஏரிகளிலும் இவற்றை அதிகம் பார்க்கலாம். நீர்குள்ளே மறைந்து விட்டு தூரத்தில் திடீர் என்று பாம்பு வெளியே வரும் இதன் அழகே அழகு!
தன்னுடைய சிறகுகளை காய வைக்க அழகாக பிரித்து வெயில் காயும்..
நன்றி: ஹிந்து
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்