கிர்ணி பழ சாகுபடி

தற்போது நல்லாத்தூர் உட்பட பல பகுதிகளில் கிர்ணி பழம் சாகுபடி செய்வதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 • கிர்ணி சாகுபடி செய்ய ஏக்கருக்கு 200 கிராம் விதையே போதுமானது.
 • ஒரு கிலோ கிர்ணி பழ விதைகள் ரூ 13,500 ஆகும்.
 • 11 நாளான நாற்றுகளை 4 அடி அகலத்தில், 2 அடி இடைவெளியில் நடவு செய்யப் படுகிறது.
 • நடவு செய்த 14ம் நாள் டி.ஏ.பி., யூரியா, பொட்டாஷ் ஆகியவை கலந்து உரமிட வேண்டும்.
 • 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்டும் போது சிறிதளவு உரமிட்டால் செடிகள் நன்கு வளரும்.
 • சாதாரண முறையிலும், சொட்டு நீர் பாசன முறையிலும் தண்ணீர் செலுத்தலாம்.
 • செடிகள் பூக்கும் சமயத்தில் பூச்சிகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்த பூச்சி மருந்துகளை தெளிக்க வேண்டும்.
 • 30 நாட்களில் காய்க்க துவங்கி 45 நாட்களில் பழங்கள் அறுவடைக்கு தயாராகின்றன.
 • தற்போது ஒரு கிலோ பழம் சில்லரை விற்பனையில் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
 • ஒரு டன் கிர்ணி பழம் 13,000 ரூபாய் ஆகும். ஒரு ஏக்கரில் 15 டன் கிர்ணி பழங்கள் கிடைக்கும்,
 • இதன் மூலம் 1 லட்சம் முதல் 1.5 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “கிர்ணி பழ சாகுபடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *