தர்மபுரிக்கும் சவுதி அரேபியாவுக்கும் என்ன சம்பந்தம்?

தர்மபுரி மாவட்டத்து விவசாயிகள், சவுதி பாலைவனத்தில் வளரும் பேரிச்சை பழம் மரத்தை நட்டிருகிரார்கள். இந்த வருடம், 2000 ஏகர் நிலம் பேரிச்சை நட்டிருகிரார்கள். பேரிச்சை நடுவதற்கு அவர்கள் கூறும் காரணம் – அதன் நீர் தேவை மிகவும் குறைவு. பூச்சிகள் வருவதில்லை என்பதே. ஆமாம், பூச்சிகள்  எப்படி வரும்? வேறு தேசத்து மரத்திற்கு, இங்கே, இயற்கையான எதிரிகள் இல்லையே? பத்து வருடம் முன்பு, 3250  ருபாய் கொடுத்து சவூதியிலிருந்து கன்றுகளை கொண்டு வந்தனர். இப்போது, இங்கேயே, கன்றுகள் வளர்கின்றனர். நல்ல லாபமும் கிடைக்கிறதாம்.

தண்ணீர் பற்றாகுறையால், தமிழ்நாட்டில் உள்ள தர்மபுரி மாவட்டம் சவுதி போல் பாலைவனம் ஆகிறதோ என்னவோ? அதனால் தான், பாலைவனது மரங்கள் எல்லாம் இங்கே நன்ற வருகிறதோ என்னவோ? ஒரு காலத்தில், சேலத்து மாம்பழம் என்று பள்ளியில் கற்று கொண்டோம். கொஞ்ச நாளில், சேலத்து பேரிச்சை என்று சொல்லும் காலம் வருமோ என்னவோ!

நன்றி: newkerala


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *