சிக்கன நீர்ப் பாசனம், லாபகரமான பயிர் சகுபடி, பயிர் சுழற்சிமுறைகள் தொடர்பான மேம்படுத்தப்பட்ட பயிற்சி, மேலூர் அருகேயுள்ள விநாயகபுரம் நீர் மேலாண்மைப் பயிற்சி நிலையத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே விநாயகபுரம் நீர் மேலாண்மைப் பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இங்கு, சென்னை, நீலகிரி நீங்கலாக, 30 மாவட்ட விவசாயிகளுக்கும், வேளாண்மை உதவி அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இப்பயிற்சி நிலையத்தில், நீர் மேலாண்மை தொடர்பான பயிற்சிகளுடன், உற்பத்தியை இரு மடங்காக்கவும், வருமானத்தை 3 மடங்காக்கும் வகையிலும் வேளாண்மைத் தொழில்நுட்பங்கள், வேளாண்மைப் பொருள்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல் தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
வாரத்தில் செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் பயிற்சியில், 3 நாள்கள் நிலைய வளாகத்திலும், ஒரு நாள் மதுரை வேளாண்மைக் கல்லூரிக்கும் அழைத்துச் செல்லப்படுகிறது. பயிற்சி நிலையத்தில், பயிற்சியாளாóகளுக்கு தங்குமிடம், உணவு, போக்குவரத்துக் கட்டணம், பயிற்சி சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. 2015-16 ஆம் ஆண்டுக்கு, மதுரை மாவட்டத்துக்கான முதல் அணிக்கான இப்பயிற்சி 9.6.2015 இல் தொடங்கப்படுகிறது.
எனவே, இப்பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள விவசாயிகள், தங்களின் பெயர்களை தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் மூலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரிடம் பதிவுசெய்து கொள்ளவேண்டும். மேலும் விவரங்கள் பெற விரும்புவோர், வேளாண்மை துணை இயக்குநர், நீர் மேலாண்மைப் பயிற்சி நிலையம், விநாயகபுரம் – 625 122, மதுரை மாவட்டம், என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
நன்றி: தினமணி
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
நல்ல பயன் உள்ள பல தகவல் கள் நன்றி
இது மாதிரி,ராமநாதபுரம் மாவட்டங்களில் பயிற்சி அளிக்க படுகிறதா.