கருகும் பயிர்களைக் காக்க இலவச நுண்ணுயிர் திரவம்

கருகும் நிலையில் உள்ள சம்பா பயிர்களைக் காப்பாற்ற  பிபிஎப்எம் என்ற நுண்ணுயிர் திரவம் அனைத்து வயல்களுக்கும் இலவசமாக தெளிக்கப்பட உள்ளது என்றார் வேளாண்துறை பேராசிரியர் ஆர். மாரிமுத்து.

பூதலூர் பகுதியில் கருகும் நிலையில் உள்ள சம்பா பயிர்களில்  பிபிஎப்எம் என்ற நுண்ணுயிர் திரவம் இலவசமாக தெளிக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூர் வேளாண்துறை அலுவலர் மாரிமுத்து கூறியது:

  • தமிழக முதல்வரின் சம்பா கூடுதல் சிறப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில், வறட்சியால் பாதிக்கப்பட்ட சம்பா நெல் பயிர்களை காப்பாற்ற பிபிஎப்எம் (pink-pigmented facultative methylotrophs (PPFM)) என்ற நுண்ணியிர் திரவம் தெளிக்கப்படுகிறது. இதன் மூலம் கருகும் நிலையில் உள்ள பயிர்களை 7 முதல் 10 நாட்கள் வரை வறட்சியிலிருந்து காப்பாற்ற முடியும்.
  • ஒரு ஏக்கருக்கு ஒரு மில்லி பிபிஎம்எம் நுண்ணுயிர் திரவத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பான் மூலமாக தெளிக்க வேண்டும்.
  • பயிர்கள் பூ பூக்கும் நிலையில் இருந்தால் மாலை 4 மணிக்கு மேல் தெளிக்க வேண்டும். மற்ற பயிர்களில் எந்த நேரம் வேண்டுமானாலும் தெளிக்கலாம்.
  • இந்தத் திட்டத்தில் பயன்பெற தஞ்சாவூர், காட்டுத் தோட்டம், மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியரை அணுகலாம். அலைபேசி எண் 09443450818.
  • பூதலூர் வட்டார விவசாயிகள் பூதலூர் அக்ரி கிளினிக் பணியாளர் கே. ரவீந்திரன் மற்றும் வேளான் மையத்தையும் அணுகலாம். அலைபேசி எண் 08344576222. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் பேராசிரியர் மாரிமுத்து.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “கருகும் பயிர்களைக் காக்க இலவச நுண்ணுயிர் திரவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *